மாணவியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று 5 பேர் கும்பல் உல்லாசம்.. நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறித்த MLA மகன்.

Published : Mar 31, 2022, 07:34 PM IST
மாணவியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று 5 பேர் கும்பல் உல்லாசம்.. நிர்வாண வீடியோ எடுத்து பணம் பறித்த MLA மகன்.

சுருக்கம்

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவேக் சர்மாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது தாயிடம் கூறியபோது தான் 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாக கூறினார். 

எம்எல்ஏ மகன் உட்பட ஐந்து பேர் சேர்ந்து பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்து.  அந்தப் பெண்ணை அவர்கள் மிரட்டி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கற்பழிப்பு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை அவர்கள் பறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பதாக கூறி பெண்களை கற்பழித்து ஏமாற்றுவது காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற வன்முறைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது. இவைகளைத் தடுக்க அரசும் காவல் துறையும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தும் பலன் இல்லை. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம்  தெளசா மாவட்டத்திலுள்ள மண்டவார் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்முறை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவியை மவ்ஹா - மண்டவர்  சாலையில் உள்ள உணவகத்திற்கு அழைத்து சென்ற 5 பேர் கொண்ட கும்பல், அங்கு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது அதை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான விவேக் சர்மா கூட்டு பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து மொத்தம் 15 லட்சம் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை பறித்ததாக  கூறப்படுகிறது. வீட்டில் இருந்து ஏராளமான தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் காணாமல் போனதால் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் முதலில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவேக் சர்மாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது தாயிடம் கூறியபோது தான் 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாக கூறினார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒரு எம்எல்ஏவின் மகனும் உள்ளார்.   சிறுமியில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆல்வார் மாவட்டத்தின் ராஜ்கர் எம்எல்ஏவின் மகன் தீபக் மீனா உட்பட நான்கு பேர் மீது போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்ணை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த பாலியல் சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. அந்த ஆணையத்தின் தலைவர் ராகேஷ் சர்மா குற்றவாளிகளை விரைந்து கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன் அவருக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!
திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!