கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

By Narendran S  |  First Published Mar 31, 2022, 4:59 PM IST

காசர்கோடு அருகே கோட்டச்சேரியில் கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 


காசர்கோடு அருகே கோட்டச்சேரியில் கர்ப்பிணி ஆட்டை பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசர்கோடு மாவட்டம் கோட்டச்சேரியில் உள்ள எலைட் ஹோட்டலின் ஆடு ஒன்று 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளது. ஹோட்டலுக்குப் பின்னால் ஒரு ஆடு மற்றும் ஒரு கர்ப்பிணி ஆட்டை ஊழியர்கள் வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில், ஹோட்டல் ஊழியர்களுக்கு ஹோட்டலுக்குப் பின்னால் இருந்து சில சத்தம் கேட்டுள்ளது. அங்கு வந்து பார்த்த போது, மூன்று பேர் சுவர் ஏறிக்குதித்து ஓடுவதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மூவரில் ஒருவர் பிடிப்பட்டார். மற்ற மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது கர்ப்பிணி ஆடு இறந்து கிடந்துள்ளது. ஆட்டின் உடலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான தடயங்கள் காணப்பட்டன.


இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசதுர்க் போலீசார், பிடிப்பட்ட செந்தில் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் காவல்துறையினரிடம் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன் வேலை கேட்டு தன்னிடம் வந்ததாக தெரிவித்தார். போலீசார் செந்திலுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தப்பியோடிய மேலும் இருவரை தேடி வருகின்றனர்.


இதுக்குறித்து காவல்துறை கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் ஐபிசியின் பிரிவு 377 இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் இயற்கைக்கு மாறான குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின்படி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி ஆட்டை 3 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் கேட்போரை அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

click me!