எனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜாகிர் அப்பாஸ் மில்டன் ராஜதுரையை சரமாரியாக கல்லால் தாக்கியுள்ளார்.
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கள்ளக்காதலியின் கணவரை கல்லால் தாக்கிய வழக்கில் அமமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமமுக நகர செயலாளர்
சென்னை பூந்தமல்லி மசூதி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் அப்பாஸ் (36). அமமுக பூந்தமல்லி நகர செயலாளர். கடந்த மாதம் பூந்தமல்லி நகராட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஜாகிர் அப்பாஸ் 33 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்து படுதோல்வியடைந்தார். அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் இவர், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது வீடு வீடாக சென்று இறைச்சி விற்பனை செய்து வந்தார்.
இதையும் படிங்க;- அண்ணியுடன் கள்ளத்தொடர்பு... அண்ணனை போட்டுதள்ளிவிட்டு 6 ஆண்டுகளாக நாடகமாடிய மனைவி..!
கள்ளக்காதல்
அப்போது, பூந்தமல்லி ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த மில்டன் ராஜதுரை என்பவரின் மனைவி ஸ்ரீஜா (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த மில்டன் ராஜதுரை, மனைவியை கண்டித்து செல்போன் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால், அவர் ஜாகிர் அப்பாஸூடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது
இந்நிலையில், பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் மில்டன் ராஜதுரை இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது வழிமறித்த ஜாகிர் அப்பாஸ், ‘‘உனது மனைவியுடன் நான் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் என்னிடம் உள்ளது. நான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன். எனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜாகிர் அப்பாஸ் மில்டன் ராஜதுரையை சரமாரியாக கல்லால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது
இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பூந்தமல்லி போலீசார் ஜாகிர் அப்பாஸை கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அமமுக நகர செயலாளர் பொறுப்பிலிருந்து ஜாகிர் அப்பாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க;- அண்ணன் இல்லாத நேரத்தில் அண்ணியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்... மைத்துனரின் பகீர் வாக்குமூலம்!