சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிட்ட இல்ல.. உன்னை எனக்கு கூட.. ஆசை தீர அனுபவித்த இளைஞரின் நிலைமையை பார்த்தீங்களா?

By vinoth kumar  |  First Published Jul 8, 2022, 3:37 PM IST

 வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் உடனே காரமடை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போச்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோலம்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான நஞ்சன் (25) என்பவருக்கும் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:-  மகளை கள்ளக்காதலனுக்கு இறையாக்கிய கொடூர தாய்.. ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் பலாத்காரம்.!

இந்நிலையில் நஞ்சன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து பெற்றோருக்கு தெரியாமல் சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின்னர் 2 பேரும் பெற்றோருக்கு தெரியாத படி அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். அப்போது நஞ்சன் சிறுமியிடம் நான் தான் உன்னை திருமணம் செய்து விட்டேனே என கூறி அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க:- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவர் கண்டித்ததால் மனைவி என்ன செய்தார் தெரியுமா?

இந்நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்த விவகாரம் உடனே காரமடை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் 16 வயது சிறுமியை பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நஞ்சனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க:- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது ஓயாமல் தொல்லை.. குழந்தையையின் கையை உடைத்த காமெறி பிடித்த தாய்.!

 

click me!