சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய சம்பவம் தொடர்பாக இளைஞரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில், ஆசைவார்த்தை கூறி சிறுமியை நைசாக அழைத்து சென்று 4 நாட்களாக அடைத்து வைத்து மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையும் படிங்க;- ஹோமோ செக்ஸ்க்கு நோ சொன்ன வாலிபர்.. விரீயம் மருந்து கொடுத்து வேலை முடிந்ததும் கதை முடித்த சித்த வைத்தியர்.!
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கதறியபடி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஹரிகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க;- சுடுகாட்டில் முனகல் சத்தம்! கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த போது தீ வைத்த கணவர்!இறுதியில் நடந்தது என்ன?
தலைமறைவாக உள்ள ஹரிகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.