வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியின் எதிரே நிறுத்திவிட்டு அறைக்கு சென்றுள்ளனர். காலையில் வந்து பார்த்தபோது கார் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பல்வேறு மாவட்டங்களில் கார், பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த குமரவேல் என்பவர் குடும்பத்துடன் கடந்த 19ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு காரில் சுற்றுலா வந்துள்ளார். அப்போது வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியின் எதிரே நிறுத்திவிட்டு அறைக்கு சென்றுள்ளனர். காலையில் வந்து பார்த்தபோது கார் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க;- பெத்த தாய் செய்யுற வேலையா இது.. 2 வயது குழந்தை துடிதுடிக்க கொலை.. நாடகமாடிய கொடூர பெண்.. சிக்கியது எப்படி?
உடனே இதுதொடர்பாக குமரவேல் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் இரண்டு நபர்கள் கள்ள சாவி கொண்டு காரை திறந்து எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில் திருவையாரை சேர்ந்த கோபிநாத், அகஸ்டின் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க;- என் கூட கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்.. இளம்பெண்ணை படுக்கை்கு கூப்பிட்ட விஓஏ பணியிடை நீக்கம்..!
பின்னர் அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு மாவட்டங்களில் பைக் மற்றும் கார் திருடிய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த வாகன கொள்ளையர்கள் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.