சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ராமாயி (78). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், மற்ற 2 மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
சேலத்தில் 78 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ராமாயி (78). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், மற்ற 2 மகன்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
undefined
இதையும் படிங்க;- உன்னை பலாத்காரம் செய்த வீடியோ இருக்கு! நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்! அண்ணணு சொல்லி நாசம் செய்த கொடூரம்.!
இந்நிலையில், ராமாயி சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அதே பகுதியில் தெருக்கூத்து நடந்தது. இதை பார்த்துவிட்டு மூதாட்டி தனியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பூசாரி மூப்பன் வளவு பகுதியில் சென்றபோது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் மூதாட்டியின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக புதருக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். போதையில் மூதாட்டியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசம்! புருஷனை நெருங்கவிடாத மனைவி! ஏக்கத்தில் டார்ச்சர்! இறுதியில் நடந்த பயங்கரம்..!
இதில் படுகாயமடைந்த மூதாட்டி மயக்கமடைந்தார். இதனையடுத்து, அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காமக்கொடூரனை தேடி வருகின்றனர்.