Crime: தோப்பு வீட்டில் வசித்த கணவன், மனைவி கல்லால் அடித்து கொடூர கொலை; எஸ்பி நேரில் விசாரணை

By Velmurugan s  |  First Published May 22, 2023, 1:32 PM IST

கரூர் அருகே மாந்தோப்பில் வசித்து வந்த வயதான கணவன், மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட எஸ்.பி சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த ஓடையூர் பகுதியில் உள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கடந்த 15 வருடங்களாக தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, கணவன், மனைவியான தங்கவேல் (வயது 65), தைலி (61) ஆகிய இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் இன்று காலை தோட்டத்து வீட்டில் தம்பதியர் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தலை மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாம்பு கடித்து சிறுமி பலி; அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்?

சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் வாங்கல் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கணவன், மனைவி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுபோதையில் தகராறு செய்த ராணுவ வீரர்; கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த இளைஞர்கள்

click me!