சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர பலமுறை பலாத்காரம்.. கர்ப்பமாக்கிய உறவினர் போக்சோவில் கைது.!

By vinoth kumar  |  First Published Jul 28, 2022, 3:31 PM IST

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய உறவினரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 


சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய உறவினரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லையை சேர்ந்த வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்துக்கு முன்பு குடியேறி மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது உறவினர் இவர்களுடன் தங்கி இருந்தார். இந்நிலையில்,  சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தொடர்ந்து வாந்தி எடுத்து சோர்வாக காணப்பட்டார். இதனையடுத்து, தாயார் சிறுமியை அழைத்து கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அவன் படிப்புதான் 8ம் வகுப்பு! பண்ற வேலையெல்லாம் வேற லெவல்! பள்ளி மாணவனுடன் எஸ்கேப்பான ஆன்ட்டி பகீர்.!

அப்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைகேட்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் உறவினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உறவினரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  குடிச்சிட்டு வந்து எந்நேரமும் ஓயாத டார்ச்சர்.. கடுப்பான கள்ளக்காதலி.. என்ன செய்தார் தெரியுமா?

click me!