
காதல் திருமணம் முடித்த 26 நாளில் ஊருக்குள் வந்து அவமானப்படுத்தியதால் மகள், மருமகனை வெட்டிக் கொன்றேன் என இளம்பெண்ணின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குட்டி (44). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது ஒரே மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், இதே பகுதியை சேர்ந்த உறவினரான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை ரேஷ்மா கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஜூன் 26ம் தேதி ரேஷ்மாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடந்தது. மேலும் மகளுக்கு திருமணம் செய்து வைக்க அவரது தந்தை ராணுவ வீரர் ஒருவரை பேசி முடிவு செய்தார்.
இதையும் படிங்க;- தந்தை பேச்சை கேட்காமல் காதல் திருமணம்! ஆத்திரத்தில் மகள்,மருமகன் ஆணவக் கொலை? 26 நாளில் முடிந்த வாழ்க்கை.!
கடந்த 28ம் தேதி மாணிக்கராஜிம், ரேஷ்மாவும் ஊரை விட்டு வெளியேறி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் இருந்தார். இதனிடையே மகளை காணவில்லை என்று முத்துக்குட்டி, எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ரேஷ்மாவும், மாணிக்கராஜிம் தங்கள் உயிருக்கு முத்துக்குட்டியால் ஆபத்து என்று திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஜூன் 29ம் தேதி புகார் செய்தனர். திருமங்கலம் போலீசாரும், எட்டயபுரம் போலீசாரும் முத்துக்குட்டியிடம் பேசி, இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்று எழுதி வாங்கினர்.
இந்நிலையில், மாணிக்கராஜிக்கு வேலை எதுவும் கிடைக்காததால் ரேஷ்மா ஊருக்கு அழைத்து வந்துள்ளார். மாணிக்கராஜின் தாய் பேச்சியம்மாளுடன் அவர்கள் வசித்து வந்தனர். கடந்த ஜூலை 25ம் தேதி பேச்சியம்மாள் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய போது மாணிக்கராஜிம், ரேஷ்மாவும் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி, காதல் தம்பதியை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. கோவில்பட்டியில் பதுங்கியிருந்த அவரையும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முத்துக்குட்டியின் மனைவி மகாலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து, அளித்துள்ள வாக்குமூலத்தில்;- எனது ஒரே மகளான ரேஷ்மாவை பிரியமாக வளர்த்தேன். அவள், மாணிக்கராஜை காதலித்தது எனக்குப் பிடிக்கவில்லை. நான், ராணுவத்தில் வேலை பார்க்கும் ஒருவரை மாப்பிள்ளையாக பார்த்தேன். ஆனால் என்னை மீறி, மாணிக்கராஜை திருமணம் செய்து கொண்டாள். சமீபத்தில் எனது மனைவி மகாலட்சுமி பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் ரேஷ்மாவும் தண்ணீர் பிடித்தார். அங்கு வந்த மாணிக்கராஜ், மகாலட்சுமியை அவமானப்படுத்தி பேசியுள்ளார்.
இதை வீட்டிற்கு வந்து என்னிடம், மகாலட்சுமி கூறினார். இதனால் எனக்கு மாணிக்கராஜ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவனை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்று அவன் வீட்டிற்கு சென்றேன். மகளும், மாணிக்கராஜிம் வெட்டி கொலை செய்தேன் என்றார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டடு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க;- என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தவல கல்யாணம் பண்ணிட்டியா.. பிளாக் மெயில் செய்த காதலியின் தலையை தனியாக எடுத்த காதலன்