ராத்திரியில செக்ஸ் மெஸேஜ்... கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் கந்தசாமி அந்த மாதிரி அலும்பல்... தூத்துக்குடியில் அதிர்ச்சி!!

By sathish kFirst Published Jun 20, 2019, 12:03 PM IST
Highlights

பள்ளி சிறுமிகள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் கொடுக்கும், பாலியல் தொல்லை அம்பலமாகி வருகிறது.

பள்ளி சிறுமிகள், கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் கொடுக்கும், பாலியல் தொல்லை அம்பலமாகி வருகிறது.

அப்படி ஒரு சம்பவம் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் நடந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில், எலும்பியல் துறை பேராசிரியர் ஒருவர் பயிற்சிக்கு வந்துள்ள மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கல்லூரியில் அந்தப் பேராசிரியர் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. அதில் சுமார் 126 மாணவிகளிடம் அந்த பேராசிரியர் மிரட்டி கையெழுத்து வாங்கியது தெரியவந்துள்ளது.

 தூத்துக்குடியில் உள்ள அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனை களில் எலும்பியல் துறை உதவிப் பேராசிரியராக இருப்பவர் கந்தசாமி அவர் மீது தொடர்ந்து அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மற்றும் பேராசிரியர் பெண் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

 பயிற்சி மாணவிகளாக பணியில் சேர்ந்து மருத்துவ மாணவிகளிடம் எலும்பியல் பேராசிரியர் கந்தசாமி அவ்வப்போது செக்ஸியாக பேசுவதும் ஆபாசத்தை தூண்டும் என வழக்கமாக வைத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் பயிற்சி மாணவிகளிடம் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு செக்ஸ்  மெசேஜ் அனுப்புவதும்,  இரவு நேரங்களில் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக பேசுவதும் தொடர்ந்துள்ளது.

ஆனால், மாணவிகள் அந்த பேராசிரியர் பற்றி எதுவும் இதுவரை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர் காரணம் இதைச் சொன்னால் தங்களது எதிர்காலம் பாழாகி விடும் என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்துள்ளனர். இந்த புகார் பற்றி மருத்துவ பேராசிரியர் லலிதா தலைமையில்  மூன்று பேர் கொண்ட குழு விசாரணை நடத்த நியமிக்கப்பட்டது. ஆனால், இதில் எந்த நியாயமும் கிடைக்காது என கருதிய மாணவிகள், ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஒருவரை கொண்டு விசாரணை நடத்தினால் கந்தசாமியின் சுயரூபம் தெரிய வரும் என்றனர்.

இதனைத் தொடர்ந்து  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி டீன் பாலசுப்பிரமணியம், இதுகுறித்து, 3 பெண்கள் மருத்துவர்களை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் விசாரித்து அறிக்கை மருத்துவ கல்லூரி இயக்குனரகத்திற்கு அனுப்பினார். 

இந்நிலையில், எழும்பியல் துறை பேராசிரியர் கந்தசாமியை அந்த கல்லூரியில் பணியாற்றிய தடைவிதித்தது மருத்துவ கல்லூரி இயக்குனரகம். சென்னையில் உள்ள மருத்துவ பணியிடத்திற்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இது குறித்து நடவடிக்கைக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டது பேராசிரியர் மாணவிகளை செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!