8ம் வகுப்பு மாணவியுடன் ஊர் சுற்றிய ஆசிரியர்.. CCTV-யில் சிக்கிய காம கொடூரன்! அதிர்ச்சி சம்பவம்

Published : May 27, 2022, 12:54 PM IST
8ம் வகுப்பு மாணவியுடன் ஊர் சுற்றிய ஆசிரியர்.. CCTV-யில் சிக்கிய காம கொடூரன்! அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

தருமபுரி அருகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எட்டாம் வகுப்பு மாணவியை, கடந்த சில நாட்களுக்கு முன் அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் கடத்தி சென்றார். 

மாணவியுடன் ஆசிரியர் உல்லாசம்

இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து 13 வயதுடைய 8ம் வகுப்பு மாணவியை கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான முபாரக் என்கின்ற ஆங்கில ஆசிரியர், இரு சக்கர வாகனத்தில் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அரூர், காேம்பூர், சேலம் அயோத்தியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து தேடி வந்தனர்.

அப்பொழுது அயோத்தியபட்டினம் பகுதியில் குற்றப்பிரிவு காவலர்கள் உதவியுடன் மொரப்பூர் காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது இருவரையும் கையும் களவுமாக பிடித்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆங்கில ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். 

ஆசிரியர் கைது

இதனை தொடர்ந்து படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினிக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்ற முபாரக் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி உத்தரவிட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ள முபாரக்கை, மீண்டும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!