மீனவ பெண் விரட்டி விரட்டி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கு... வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published : May 27, 2022, 12:51 PM IST
மீனவ பெண் விரட்டி விரட்டி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கு... வெளியான அதிர்ச்சி தகவல்.!

சுருக்கம்

தனியார் இறால் பண்ணை அருகே மீனவ பெண் சந்திராவை அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து  படுகொலை செய்துள்ளனர். இதனையடுத்து, அடையாளம் தெரியாமல் இருக்க முகம் மற்றும் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். 

ராமேஸ்வரம் அருகே வடகாட்டில் மீனவ பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (45). இவர் வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக கடந்த 24ம் தேதி சென்றுள்ளார். அப்போது, தனியார் இறால் பண்ணை அருகே மீனவ பெண் சந்திராவை அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து  படுகொலை செய்துள்ளனர். இதனையடுத்து, அடையாளம் தெரியாமல் இருக்க முகம் மற்றும் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அதில் சந்திராவின் உடல் நிர்வாணமாக அரைகுறையாக  எரிந்து கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்து கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இறுதியில் ரஞ்சன் ராணா, பிரகாஷ் ஆகிய 2 வடமாநில தொழிலாளர்கள் மட்டுமே சேர்ந்து மீனவ பெண்ணை விரட்டி விரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும். அந்தப் பெண்ணின் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெளிவாக தெரிய வந்துள்ளது.

மேலும் அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க காசு திருமாங்கல்யம் உள்ளிட்டவற்றை திருடி ராமேஸ்வரத்தில் உள்ள நகைகளை அடகு வைத்து பணம் பெறவும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் எந்த நகைக்கடையிலும் அந்த திருமாங்கல்யத்தை வாங்காததால் அதை துணியில் சுற்றி இறால் பண்ணையிலுள்ள தண்ணீர் தொட்டியில் வீசியதும் தெரியவந்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு