ஒரே நேரத்தில் 3 பேரை போட்டுதள்ள பக்கா ஸ்கெட்ச்.. 7 பேரை துப்பாக்கி முனையில் அலேக்கா தூக்கிய சென்னை போலீஸ்.!

By vinoth kumarFirst Published May 27, 2022, 11:22 AM IST
Highlights

 விசாரணையில் பிடிபட்ட ஆவடி பிரகாஷ், வில்லிவாக்கம் பாலகிருஷ்ணன் தரப்புக்கும், பெரம்பூர் காந்தி சிலை பகுதியை சேர்ந்த பாக்சர் விக்கி, அவரது தம்பி சீனா தரப்பினருக்கும் இடையே கஞ்சா விற்பதில் முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 25ம் தேதி பெரம்பூர் பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் 3 பேரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட கும்பளை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். 

சென்னை மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக கொரட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து,  தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை மாதனாங்குப்பம், பஜனை கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். 

அங்கு 7 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில்,  ஆவடி பிரகாஷ், புத்தாகரம் ஜெயக்குமார், கல்பாளையம் பிரகாஷ், வில்லிவாக்கம் பாலகிருஷ்ணன்,  வில்லிவாக்கம் ஐசக் ராபர்ட், பெரம்பலூர் ஈசாக், திருமுல்லைவாயில் கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. 

மேலும் விசாரணையில் பிடிபட்ட ஆவடி பிரகாஷ், வில்லிவாக்கம் பாலகிருஷ்ணன் தரப்புக்கும், பெரம்பூர் காந்தி சிலை பகுதியை சேர்ந்த பாக்சர் விக்கி, அவரது தம்பி சீனா தரப்பினருக்கும் இடையே கஞ்சா விற்பதில் முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 25ம் தேதி பெரம்பூர் பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், தங்களை தாக்கிய பாக்சர் விக்கி, அவரது தம்பி சீனா மற்றும் தினேஷை உள்ளிட்ட 3 பேரை ஒரே நேரத்தில் போட்டுதள்ள இருந்தபோது, போலீசில் சிக்கியது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 5 ஆசிட் பாட்டில்கள், 5 இருசக்கர வாகனம், 7 செல்போன்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 11 அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சரியான நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்ததால் கொலைதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. கைதான 7 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

click me!