கொள்ளையடித்த பணத்தில் ஜாலியாக விமான பயணம்!சிறுவர்களின் உதவியோடு திருடிய வட மாநில கும்பலை தட்டி தூக்கிய போலீஸ்

Published : Jul 06, 2022, 11:18 AM ISTUpdated : Jul 06, 2022, 11:26 AM IST
கொள்ளையடித்த பணத்தில் ஜாலியாக விமான பயணம்!சிறுவர்களின் உதவியோடு திருடிய வட மாநில கும்பலை  தட்டி தூக்கிய போலீஸ்

சுருக்கம்

கொள்ளையடித்த பணத்தில் ஜாலியாக விமான பயணம் செய்த வட மாநில கும்பலை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.

வட மாநில கும்பலின் மோசடி

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வட மாநில கும்பல்களின் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மேம்பாலம் அமைக்கும் போது தங்கம் கிடைத்ததாக ஏமாற்றுவது, கிரிடிட் கார்டு பாஸ்வேர்டு கேட்டு மோசடி செய்வது, முகநூலில் பணம் கேட்டு மெசேஜ் செய்வது, ஆபாச படங்களை அனுப்பி மிரட்டுவது உள்ளிட்ட பல மோசடி செயல்களை வட மாநில கும்பல் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், திருட்டு வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பலை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரம்  பூமார்க்கெட்  பஸ் நிறுத்தம் அருகே 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் ஒரு முதியவரை சூழ்ந்து கொண்டு அவருக்கு தெரியாமல் பணம் மற்றும் செல்போனை திருடிக்கொண்டிருந்தனர்.  இதனை பார்த்த போலீசார் மெதுவாக அவர்களது அருகில் சென்று 7 பேர் கும்பலையும்  சுற்றி வலைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

OTP சொல்லாம ஏன் கார்ல ஏறுன.. மனைவி குழந்தைகள் கண்முன் மென்பெறியாளரை அடித்து கொன்ற ஓலா டிரைவர்...

சிறுவர்கள் உதவியோடு திருட்டு

அப்போது அவர்கள் ஜார்கண்ட்டை சேர்ந்த பகதூர் மகடோ (வயது 36), சந்தோஷ் (33), பப்லு மகடோ (23) பீகாரை சேர்ந்த மனிஷ்மகோலி (22), பீகாரை சேர்ந்த 15 சிறுவன், ஜார்கண்ட்டை சேர்ந்த 14 மற்றும் 10 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில்  அவர்கள் கூறிய  தகவல் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  7 பேரும்  பீகார், ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள் என்றும்,  வாரத்தில் ஒரு நாள் கோவை வருவோம், இங்கு காந்திபுரத்தில் அறை எடுத்து தங்கி கொள்வோம். பின்னர் 7 பேரும் எங்கு சென்றாலும் கும்பலாக செல்வோம். கடைகளுக்கு  செல்லும்போது பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கு எது கிடைத்தாலும் திருடி கொண்டு வந்துவிடுவோம்.  விஷேச நாட்களில் எங்கு கூட்டம் அதிகம் கூடும் என பார்த்து அங்கு செல்வோம் என தெரிவித்துள்ளனர். மேலும் வாரத்தில்  2 நாட்கள் திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட பகுதிகளுக்கும் சென்றும் கொள்ளை அடித்து வருவோம் என தெரிவித்துள்ளனர். மேலும் 

ஊதாரித்தனமாக செலவு செய்த மகனை கூலிப்படை வைத்து போட்டுத்தள்ளிய தந்தை.. வெளியான பகீர் தகவல்.!

கொள்ளையடித்த பணத்தில் விமான பயணம்

கோவையில் காலை நேரத்தில் உழவர் சந்தை, பூமார்க்கெட் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப்படும். அங்கு அதிகாலை சென்று செல்போன் மற்றும் பணத்தை திருடுவோம். பின்னர் ரெயில் நிலையம், காந்திபுரம், உக்கடம்,  சிங்காநல்லூர்   ஆகிய இடங்களுக்கு செல்வோம். எங்கள் கும்பலில் 3 சிறுவர்கள் உள்ளனர். அவர்களே பெரும்பாலும் திருடுவார்கள். சிறுவர்கள் சிக்கி கொண்டால் சில சமயங்களில் எச்சரித்து விட்டு விடுவார்கள் என்பதால் அவர்களை முன்னிறுத்தி திருடுவோம் என தெரிவித்துள்ளனர். மேலும் கோவையில் திருடிவிட்டு  சொந்த ஊருக்கு செல்லும் போது ஒருவர் விமானத்தில் செல்வோம் மற்றவர்கள் ரெயில் செல்வோம் என தெரிவித்துள்ளனர். மேலும் . சுழற்சி முறையில் கோவையில் இருந்து ஒருவர் ஒருவராக விமானத்தில் செல்வோம் என்றும் கொள்ளையடித்த பணத்தில் ஜார்கண்ட் சென்றுஆடம்பரமாக செலவு செய்து ஜாலியாக இருப்போம் என கூறியுள்ளனர்.  பணம் தீர்ந்ததும் மீண்டும் கோவை வந்து கொள்ளை அடிப்போம் என வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதனையடுத்து 4 பேர்மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 3 சிறுவர்களை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படியங்கள்

என்னுடைய பிள்ளையை பார்க்க விட மாட்டியா? மனைவியை சல்லி சல்லியாய் வெட்டிய கணவர்..தேனியில் பயங்கரம்.!
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!