இளம்பெண் போல மேக்கப் போட்டு 3 திருமணம் செய்து மோசடி.. பலான விஷயத்தில் சிக்கினார்.

Published : Jul 05, 2022, 09:16 PM ISTUpdated : Jul 05, 2022, 09:21 PM IST
இளம்பெண் போல மேக்கப் போட்டு 3 திருமணம் செய்து மோசடி.. பலான விஷயத்தில் சிக்கினார்.

சுருக்கம்

55 வயது பாட்டி ஒருவர் 30 வயது பெண் போல மேக்கப் போட்டு இளைஞரை திருமணம் செய்து நகை பணத்தை ஏமாற்றிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.   

55 வயது பாட்டி ஒருவர் 30 வயது பெண் போல மேக்கப் போட்டு இளைஞரை திருமணம் செய்து நகை பணத்தை ஏமாற்றிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த முத்தாப் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர்  விவாகரத்து பெற்ற தனது மகன் கணேஷ் என்பவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார்.  அதற்காக பெண் தேடி வந்தார், அப்போது இடைத்தரகர்கள் மூலம் ஆந்திராவைச் சேர்ந்த சரண்யா என்பவர் அறிமுகமானார், சரண்யாவுக்கு (35) வயது என்றும், திருமணமாகி விவாகரத்து பெற்றவர், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் புரோக்கர்கள் தெரிவித்தனர்.

இதனால் வரதட்சணை எதுவும் வாங்காமல், கணேஷுக்கு நெருங்கிய சொந்தங்கள் சூழ திருமணம் நடத்தி வைத்தார் இந்திராணி,  திருமணம் முடிந்த சில நாட்களில் மனைவி சரண்யாவுக்கு 25 சவரன் தங்க நகைகளை கணவர் கணேஷ் வாங்கி கொடுத்தார். அடுத்த சில நாட்கள் கடந்ததும் கணேஷிடம்  சரண்யா அதிகாரம் செலுத்தியுள்ளார். பீரோ சாவியைப் பெற்றுக் கொண்ட அவர், மாத வருமானத்தை முழுமையாக வழங்க வேண்டும், அனைத்து சொத்துக்களையும் தனது பெயரில் மாற்ற வேண்டுமென வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு தடையாக இருந்த மாமியார் இந்திராணியை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மனைவி சரண்யாவின் தொல்லை தாங்காமல் சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டார் கணேஷ், சொத்துக்களை பத்திர பதிவு செய்ய சரண்யாவிடம் ஆதார் அட்டை பெற்ற போது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தன்னிடம் இல்லை எனக்கூறி ஆதாரங்களை தராமல் இழுத்தடித்து வந்தார் சரண்யா. ஒருகட்டத்தில் சரண்யா தனது ஆதார் அட்டைகளை ரமேஷிடம் கொடுக்க அதில் சுகுணா கேர் ஆப் c/o ரவி என இருந்துள்ளது. வீட்டில் என்னை சுகுணா என்று கூப்பிடுவார்கள் அப்பாவின் பெயர் ரவி என்ன சமாளித்துள்ளார் சரண்யா,

ஆந்திர மாநிலத்தில் கணவர் பெயர் c/o என்று குறிப்பிடுவது வழக்கம். இதனால் கணேசுக்கும் அவரது தாயாருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உறவினர்களிடம் கூறி விசாரிக்க சரண்யா ஒரு மோசடி நபர் என்பதும்,  54 வயதாகும் சரண்யாவுக்கு பேரன் பேத்திகள் உள்ளனர் என்றும் தெரியவந்தது. சரண்யா மீது ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுகுணா என்பவர் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர், மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி பேரக்குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தனது தாயாருடன்  திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் வசித்து வந்துள்ளார், வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால் சுகுணா மற்றும் அவரது தாயார் அந்தப் பகுதியில் திருமண புரோக்கர்கள் மூலம்  திருமண ஏமாற்று வேலையில் ஈடுபடத் தொடங்கினர். இரண்டாவதாக திருமணம் செய்ய காத்திருப்பவர்களை குறிவைத்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த ரயில்வே  உணவு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் என்பவருடன் சந்தியா என்ற பெயரில் திருமணம் செய்து மோசடி செய்துள்ளார், சில நாட்கள் அவருடன் குடும்பம் நடத்தி பணம் நகைகளை திருடி வந்துள்ளார். முதல்கணவர் மீது ஆந்திர காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்துள்ளார், 10 லட்சம் பணம் சுருட்டிய சரண்யாதான் தற்போது ஆவடியை சேர்ந்த கணேசை திருமணம் செய்து மோசடி செய்ய திட்டமிட்ட நிலையில் ஆதார் கார்டில் சிக்கிவிட்டார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!