கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடத்தி, ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போண்டா மணிக்கு கிட்னி பாதிப்பு
போண்டாமணிக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவ வேண்டும் என அவரது நண்பரும் நடிகருமான பெஞ்சமின் வீடியோ வெளியிட்டு இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று பல திரையுலக நட்சத்திரங்கள் உதவி வருகின்றனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் மருத்துவமனைக்கு சென்று தேவையான மருத்துவ உதவிகளை வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் தலா 1 ஒரு லட்சம் ரூபாய் உதவி செய்திருந்தனர். நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார். இதனையடுத்து சிகிச்சைக்கு இடையே வீடு திரும்பிய போண்டா மணிக்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதவி தொகை வழங்கியிருந்தார்.
உதவி செய்வது போல் மோசடி
இந்திநலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த போண்டா மணிக்கு உதவி செய்வது போல் ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் இருந்துள்ளார். அப்போது போண்டா மணிக்கு மருந்துகள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது போண்டாமணியின் மனைவி தேவியிடம் ஏடிஎம் கார்டை பெற்றுச்சென்ற ராஜேஷ் பிரித்தீவ் திரும்பி வராமல் சென்றுள்ளார். மேலும் ஏடிஎம் கார்டில் ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசில் கொடுத்த புகாரின் அடிப்பைடியில் உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சத்தை சுருட்டிய ராஜேஷ் பிரித்தீவ்வை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பொண்டா மணியின் ஏடிஎம் கார்டு மூலம் ரூ.1 லட்சத்திற்கு நகை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படியுங்கள்
சூர்யா சிவாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி கவுரவித்த நித்யானந்தா.! எதற்காக விருது தெரியுமா.?