பள்ளிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி காரில் வைத்து அடிக்கடி பலாத்காரம்.. 8 மாதம் கர்ப்பத்தால் அதிர்ச்சி.!

Published : Oct 07, 2022, 10:25 AM ISTUpdated : Oct 07, 2022, 10:28 AM IST
பள்ளிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி காரில் வைத்து அடிக்கடி பலாத்காரம்..  8 மாதம் கர்ப்பத்தால் அதிர்ச்சி.!

சுருக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் சேகர்(50).  இவர் வீட்டின் அருகே வசித்து வரும் தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். மாணவியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில் சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 

ஊட்டியில் 9ம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய நர்சரி உரிமையாளரை போலீசார் போச்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த நர்சரி உரிமையாளர் சேகர்(50).  இவர் வீட்டின் அருகே வசித்து வரும் தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். மாணவியை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல தம்பதியினருக்கு நேரம் கிடைக்காத சமயங்களில் சேகர் அந்த மாணவியை காரில் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்வதாக மாணவியை சேகர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க முடியாமல் ஏக்கம்.. தடையாக இருந்த கணவரை கூலிப்படை வைத்து போட்டுதள்ளிய மனைவி

இந்நிலையில், மாணவியின் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர் மாணவியை பரிசோதனை செய்த போது 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை சற்றும் எதிர்பராத பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் சேகர் மாணவிக்கு 2 வருடங்களுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்ததும், இதுகுறித்து வெளியில் எதுவும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதால் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, சேகரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- நீ என்னோடு உல்லாசமா இருக்க வரல.. உங்க அம்மா அப்பாவை கொலை பண்ணிடுவேன்.. இறுதியின் கள்ளக்காதலன் செய்த பகீர்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!