தோஷம் இருக்கா உங்களுக்கு ? பக்தர்களிடம் நகையை அபேஸ் செய்த கில்லாடி பூசாரி

Published : Jul 12, 2022, 06:18 PM IST
தோஷம் இருக்கா உங்களுக்கு ? பக்தர்களிடம் நகையை அபேஸ் செய்த கில்லாடி பூசாரி

சுருக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூதன முறையில் 70 சவரன் நகைகளை மோசடி செய்த பழனிக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்த தம்பதி பாலமுருகன்-தங்கமாயா. காய்கறி வியாபாரம் செய்து வந்த பாலமுருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள கோயில் பூசாரியிடம் அருள்வாக்கு கேட்டால் கணவரின் உடல் நலன் தேறிவிடும் என்று தங்கமாயாவிடம் அக்கம்பக்கத்தினர் கூறினர்.

இதனையடுத்து, கோயிலுக்குச் சென்ற தங்கமாயா பூசாரி பழனிகுமாரிடம், தனது கணவர் உடல்நிலை சரியில்லை என்று கூறி அருள்வாக்கு கேட்டுள்ளார். அப்போது, உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளதாகவும், அதனைக் கழிப்பதற்கு வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வரும்படியும் பழனிக்குமார் கூறியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு.. அதிமுக கட்சிக்கு இத்தனை கோடி சொத்து? எப்படி இருந்த கட்சி.. குமுறும் அதிமுக தொண்டர்கள்.!

இதனை நம்பி தனது வீட்டில் இருந்த 26.6 பவுன் நகையைப் பழனிகுமாரிடம் அவர் கொடுத்ததுள்ளார். ஆனால், நகையைப் பெற்றுக் கொண்ட பூசாரி அதனைத் திருப்பித் தராமல் இருந்துள்ளார். பலமுறை கேட்டும் திருப்பித் தராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தங்கமாயா இதுகுறித்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

இதன் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர், பழனிக்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ரம்யா ஆகியோரை இன்று கைது செய்தனர். இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தங்கமாயாவை ஏமாற்றியது போல், பலரையும் ஏமாற்றி இருவரும் சுமார் 60 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது.

மேலும் செய்திகளுக்கு.. முடக்கப்படும் அதிமுக வங்கி கணக்கு? வங்கிகளுக்கு மாறிமாறி கடிதம் எழுதிய ஓபிஎஸ், இபிஎஸ்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!