கடனை கட்டு, இல்ல போட்டோவ நிர்வாணமா போட்டு நாரடிச்சிடுவோம்.. டார்ச்சர் தாங்கமுடியாமல் பெண் தற்கொலை.

By Ezhilarasan BabuFirst Published Jul 12, 2022, 5:52 PM IST
Highlights

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய பெண் அதன் ஊழியர்களின் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இது ஆந்திர மாநிலம் குண்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய பெண் அதன் ஊழியர்களின் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இது ஆந்திர மாநிலம் குண்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பலர் தங்கள் அவசர தேவைக்காக ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்குகின்றனர். பின்னர் அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும்போது கடுமையான மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். சிலர் துணிந்து காவல்நிலையத்தில் அது குறித்து புகார் கொடுக்கின்றனர் ஆனால் பலர் கடன் தொல்லைக்கு பயந்து தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர், இதுபோன்ற ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்துள்ளது, லோன் ஆப் மேலாளர்களின் தொல்லை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குண்டூர் மாவட்டம் மங்களகிரி மண்டலம் சின்னகக்கனி கிராமத்தைச் சேர்ந்த  திருமணமான பெண் பிரத் யூஷா, இந்தியன் புல்ஸ் மற்றும் ரூபெக்ஸ் ஆப்பிள் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.

தையும் படியுங்கள்: திருநங்கையுடன் பாலியல் இச்சைக்கு சென்ற கடைக்காரர்..கடைசியில் நடந்த விபரீத சம்பவம்

ஏற்கனவே 20 ஆயிரம் கடனுக்கு 12000 செலுத்தியுள்ளார், ஆனால் மீதமுள்ள பணத்தை செலுத்த முடியவில்லை, இதனால் லோன் ஆப் கால் சென்டரில் இருந்து  கடனை கட்டச் சொல்லி தொல்லை கொடுக்க தொடங்கினர், கடந்த இரண்டு நாட்களாக லோன் ஆப் நிர்வாகிகள் அவரை கடுமையாக மிரட்டி வந்துள்ளனர். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதையும் படியுங்கள்: கஞ்சா விற்றவர்களின் சொத்துக்கள் முடக்கம்..! அதிரடி நடவடிக்கை எடுத்த போலீஸ்

மேலும் லோன் செலுத்தவில்லை என்றால் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சமூகவலைதளத்தில் வெளியிடப்படும் என அவர்கள் மிரட்டியுள்ளனர் அதுமட்டுமின்றி வாட்ஸாப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளனர். அதேபோல் அவரது உறவினர்களின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பிரதியூஷா கடன் பெற்றுக் கொண்டு திருப்பித் தர மறுக்கிறார் என கூறி வந்ததாக தெரிகிறது. இது ஓரிரு நாட்கள் அல்ல தினமும் இந்த சித்திரவதையை அவர் அனுபவித்து வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: இளம் பெண்ணை பூட்டி வைத்து ஆசை தீர உல்லாசம்... மதம் மாற்றி திருமணம்... கொத்தா பிடித்து துக்கிய போலீஸ்

இதை வெளியில் சொன்னால் தனது குடும்ப கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படும் என அஞ்சி அவர், இதை யாரிடமும் கூறவில்லை, மாறாக கணவர் தனது பெற்றோர்களுக்கு வீடியோ கால் செய்து வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள், எனக்கு வேறு வழி தெரியவில்லை என அவர் அழுதபடியே தூக்கில் தொங்கியுள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்னர்  லோன் ஆப் மூலம் கடன் பெற்றதை அவர் தனது கணவருக்கு வீடியோவாக கூறினார், மாலை 7 மணிக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் தன் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவோம் என அவர்கள் மிரட்டி வருவதையும் அவர் கூறினார்.

இதுதொடர்பான வீடியோவை தனது பெற்றோர் மற்றும் கணவருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார், அவர் தற்கொலை செய்து கொண்ட பின்னரும் லோன்ஆப் மேலாளர்கள் தொல்லை ஓயவில்லை தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் அவருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இருந்தனர். நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

click me!