Crime: சேலத்தில் கூலி தொழிலாளி தலை சிதைக்கப்பட்டு படுகொலை; காவல் துறை விசாரணை

By Velmurugan s  |  First Published May 17, 2023, 5:06 PM IST

சேலத்தில் கூலி தொழிலாளி தலையில் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அடுத்த செங்கல் அணை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகணபதி (வயது 42). தனது மனைவி மீனாவை பிரிந்து பெற்றோருடன் செங்கல் அணை பகுதியில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் மேல் தளத்தில் அண்ணன் செல்வம் அவரின் மனைவியுடன் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் பெற்றோர் பெயரில் உள்ள வீட்டை இரண்டு பாகமாக பிரித்து அண்ணனுக்கும், தனக்கும் வழங்க வேண்டும் என்று ராஜகணபதி கூறிவந்துள்ளார். அதற்கு அவரின் அண்ணன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனை அடுத்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

கரூரில் 120 அடி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்ணால் 4 மணி நேரம் பரபரப்பு

புகார் தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில் நேற்று இரவும் சொத்து தகராறு காரணமாக ராஜகணபதி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் கீழ் தளத்தில் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக ராஜ கணபதி கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல் துறையினர், ராஜ கணபதியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

வடிவேலு பட காமெடியை குறிப்பிட்டு; தமிழக காவல், போக்குவரத்து துறையை பங்கமாக கலாய்த்த பாஜக

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்மாபேட்டை காவல் துறையினர் கொலை செய்தது யார்? சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!