கல்யாணத்துல நீ எப்படி அவங்க கூட டான்ஸ் ஆடுவ.. கொதித்த கணவர்.. தட்டிக் கேட்ட சகோதரர்கள் துடிதுடிக்க கொலை..!

Published : May 17, 2023, 12:20 PM IST
கல்யாணத்துல நீ எப்படி அவங்க கூட டான்ஸ் ஆடுவ.. கொதித்த கணவர்.. தட்டிக் கேட்ட சகோதரர்கள் துடிதுடிக்க கொலை..!

சுருக்கம்

திருமணத்தில் டின்ஹாவின் மனைவி, மற்ற குடும்பத்தினருடன் சேர்ந்து நடனமாடிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த டின்ஹா பேகா திருமண விழாவில் எப்படி நடனம் ஆடலாம் என மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

திருமண விழாவில் மனைவி நடனமாடிய ஆத்திரத்தில் குடிபோதையில் இருந்த கணவர் தனது இரண்டு  சகோதரர்களைக் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள பாங்கவுரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த டின்ஹா பேகா குடிபோதையில் இருந்துள்ளார். இந்த திருமணத்தில் டின்ஹாவின் மனைவி, மற்ற குடும்பத்தினருடன் சேர்ந்து நடனமாடிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த டின்ஹா பேகா திருமண விழாவில் எப்படி நடனம் ஆடலாம் என மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது டின்ஹாவை அவரது இரண்டு சகோதரர்கள் சமாதானம் செய்த போது ஆத்திரமைந்த அவர் சகோதர்களை இரண்டு பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது மனைவி, மைத்துனர் உள்ளிட்டவரையும் கத்தியால் குத்தியதால் திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கத்தி குத்தால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால், டின்ஹாவின் இரண்டு சகோதரர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் டின்ஹா பேகாவை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!