மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு; மதுபாட்டிலால் கழுத்தில் குத்தி ஒருவர் கொலை

By Velmurugan s  |  First Published May 17, 2023, 2:12 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் மதுபாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உமாராணி (வயது 42). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கோயம்புத்தூரில் பெயிண்டராக வேலை பார்க்கும் சிதம்பரத்தைச் சேர்ந்த கணேசன் (30) என்பவருடன் உமா ராணிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கணேசனுக்கும், உமாராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், உமாராணி கோபித்துக் கொண்டு அவரது சொந்த ஊரான தேவநாயக்கன்பட்டிக்கு வந்து விட்டார். இதை அறிந்த கணேசன் கோயம்புத்தூரில் இருந்து உமாராணியை பார்க்க தேவநாயக்கன்பட்டி வந்துள்ளார். வந்த இடத்தில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான காளிதாஸ் (27) என்பவரை  உமாராணி அழைத்து கணேசனை கோயம்புத்தூருக்கு பஸ் ஏற்றி விடுமாறு கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

நாமக்கல்லில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்ததில் ஒருவர் உயிரிழப்பு

அதனைத் தொடர்ந்து காளிதாஸ், கணேசனை வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் இருவரும் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடையில் மது வாங்கி அருகே உள்ள பகுதியில் அமர்ந்து குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு காளிதாஸ் கணேசனை தாக்கியுள்ளார். இது குறித்து கணேசன், உமாராணிக்கு போன் செய்து கூறியுள்ளார். அதன் பின்னர் உமாராணி ஒரு வாடகை காரில் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடை அருகே சென்று காரில் அமர்ந்துகொண்டபடி சமாதானம் செய்துள்ளார்.

சொத்துக்காக உடன் பிறந்த அண்ணனை கொலை செய்த தம்பி, தங்கை உட்பட 9 பேர் கைது

அப்போது கணேசன் தான் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து காளிதாசின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று காளிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

click me!