பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. தலைதீபாவளி கொண்டாட சென்ற புதுமாப்பிள்ளை கூலிப்படையால் கொலை?

By vinoth kumarFirst Published Oct 26, 2022, 8:44 AM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(22). இவருக்கும்  ஆயலாம்பேட்டையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதல் விவகாரம் இருவீட்டார் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தலைதீபாவளி கொண்டாட மாமனர் வீட்டிற்கு சென்ற போது கூலிப்படையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(22). இவருக்கும்  ஆயலாம்பேட்டையை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதல் விவகாரம் இருவீட்டார் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து, ஒருவழியாக இருவீட்டார் பெற்றோரும் ஏற்றுக்கொண்டதால் சரத்குமாரின் வீட்டில் காதல் மனைவியுடன் வசித்து வந்தார். 

இதையும் படிங்க;- தலையில் ஒரே போடு! 18 வெட்டுகள்! 5 வருட காதலியை துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் கொன்ற காதலன்!என்ன காரணம் தெரியுமா?

இந்நிலையில் ஒரே மகள் என்பதால் பெற்றோர், தலைதீபாவளிக்காக  தங்கள் வீட்டுக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் சரத்குமார், மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்று தலை தீபாவளி கொண்டாடினர். இதனையடுத்து, இரவு சரத்குமார் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். அவருடன் மாமனார் உமாபதியும் உடன் சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென சரத்குமாரை தாக்கியது. தடுக்க முயன்ற மாமனாரை தாக்கிவிட்டு பின்னர் சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்திச் சென்றது. 

இதனையடுத்து, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரத்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அந்த கும்பல் தப்பித்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சரத்குமாரை மீட்டு உமாபதியும் உறவினர்களும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சோளிங்கர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையில் இறங்கியுள்ளனர். 

இதையும் படிங்க;-  கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவர் கழுத்தை அறுத்து கொலை.. அப்புறம் இருவரும் என்ன செய்தார்கள் தெரியுமா?

click me!