திருச்சியில் சைபர் கிரைம் மோசடியில் பெண் ஒருவர் ரூ.9 லட்சத்துக்கு மேல் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இணையதள பயன்பாடு அதிகரிப்பிற்கு பிறகு சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தகவல் திருட்டுக்களாக, பண மோசடிகளாக, சமூக வலைதள அவதூறுகளாக எனக் குற்றங்களும் டிஜிட்டல் வடிவம் பெற்றிருக்கின்றது.
திருச்சி மஸ்ஜித் தெருவில் வசிக்கும் அனிஷா அமல் என்ற பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. மேலும் அவரது செல்போன் எண்ணுக்கு ரூ.35 லட்சம் பரிசும், பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றும் பரிசாக கிடைத்துள்ளதாக அந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அழைப்பாளர் அந்த பெண்ணிடம் வரிக்காக ரூ.9,39,500 பரிமாற்றம் செய்யும்படி கூறினார்.
இதையும் படிங்க..Solar Eclipse 2022: ஐரோப்பா முதல் இந்தியா வரை - சூரிய கிரகணத்தின் முழு புகைப்படங்கள் இதோ !!
அவர் வென்ற தொகையில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டும் என்று கூறினார். முதலில் தயங்கிய அனிஷா, பின்னர் அந்தத் தொகையை தெரியாத நபர் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். பணத்தை மாற்றியும் வாக்குறுதி அளித்த பரிசுத் தொகை கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்தார்.
இதையடுத்து திருச்சி மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அனிஷா புகார் அளித்தார். பெண்ணின் புகாரின் அடிப்படையில், அதிகாரிகள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 417, 419, மற்றும் 420 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66D ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா