சிசிடிவி காட்சியில் முபின் தனது வீட்டில் இருந்து எடுத்து சென்ற பொருள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 2 சிலிண்டர், 3 கேனை எடுத்து சென்றுள்ளனர். வெடி பொருட்கள் என்று தெரிந்தே உதவி செய்துள்ளனர் என கூறியுள்ளார்,
10பேர் கைக்கு மாறிய கார்
கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்தார். அப்போது, நேற்று முத் தினம் அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த உடன் காவல்துறை அந்த பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. தடயங்களை பாதுகாத்து தடயவியல் வல்லுனர்களை வரவழைத்து கைரேகை பிரிவு, மோப்பநாய் பிரிவு, என அறிவிப்பு பூர்வமாக அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் இறந்த நபர் யார் என உடனடியாக கண்டறியப்பட்டது. கார் உரிமையாளர் யார் என விசாரணை மேற்கொண்டதில் இந்த காரானது 10 பேரின் கைகளுக்கு மாறி உள்ளது. இதனையடுத்து முபின் வீட்டில் நடத்திய சோதனையில் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி பொருள்கள் 75 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உபா சட்டத்தில் வழக்கு பதிவு
தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் நேற்று இரவு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் தகவல் அறிக்கையில் தற்போது UAPA பிரிவு கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது எனவும், கூட்டுசதி , இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளும் முதல் தகவல் அறிக்கையில் கூடுதலாக சேர்க்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.இந்த வழக்கில் A1 குற்றவாளியாக இறந்த முபின் உள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 5 பேரை இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பவுள்ளோம். மேலும் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வீடுகளில் சோதனை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.
இரண்டு சிலிண்டர் கொண்டு சென்றனர்
காரில் சிலிண்டரோடு முபின் சென்றபோது காவல்துறை சோதனை சாவடி இருந்துள்ளது. இதன் காரணமாக கோயில் அருகே காரை நிறுத்தியுள்ளார். இதனால் அந்த பகுதியில் இருந்து செல்ல முடியாமல் முபின் இருந்துள்ளார். அப்போது கார் வெடித்ததும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த தீயானது அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் நிவாஸ், பெரோஸ் ஆகியோர் EXPLOSIVE ஏற்றி செல்ல உதவி உள்ளனர். அந்த 3 பேரையும் கைது செய்துள்ளோம் . மேலும் சிசிடிவி காட்சியில் முபின் தனது வீட்டில் இருந்து எடுத்து சென்ற பொருள் தொடர்பான் கேள்விக்கு பதில் அளித்த ஆணையர் பாலகிருஷ்ணன் 2 சிலிண்டர், 3 கேனை எடுத்து சென்றுள்ளனர். வெடி பொருட்கள் என்று தெரிந்தே உதவி செய்துள்ளனர். மேலும் கேரளா சிறையில் இருக்கும் அசாருதீனை சந்தித்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்
மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற நினைப்பதா.? அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி