டூர் போன தம்பதிகள்..திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய கொள்ளையன் - வெளியான அதிர்ச்சி காரணம்

By Raghupati R  |  First Published Oct 25, 2022, 8:25 PM IST

திருட வந்த இடத்தில் கொள்ளையன் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியையும், பரப்பரப்பையும் கிளப்பியுள்ளது.


கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருபவர் ஸ்ரீதர் சமந்தாராய். இவருக்கு வயது 42. மென் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த மாதம் தனது மனைவியுடன் வெளிநாடு பயணத்திற்கு சென்றுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளனர். அப்போது தங்கள் கையில் வைத்திருந்த சாவியை கொண்டு கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு திறக்கவில்லை.

Tap to resize

Latest Videos

undefined

இதனால் சாவி செய்யும் கடையை அணுகி வேறு சாவி செய்ய சொல்லி, அதை வைத்து கதவை திறந்துள்ளனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பீரோவை திறந்து பார்க்கையில் பல இலட்சம் மதிப்புடைய நகைகள், பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க..Solar Eclipse 2022: ஐரோப்பா முதல் இந்தியா வரை - சூரிய கிரகணத்தின் முழு புகைப்படங்கள் இதோ !!

பிறகு போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். பூஜை அறையை திறந்து பார்க்கையில் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் பண மூட்டை, வீட்டை உடைக்கு கொண்டு வந்த ஆயுதங்கள் உள்ளிட்டவை இருந்தது. உடனடியாக சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் அவரது புகைப்படம் காவல்துறை வட்டாரத்திற்கு அனுப்பப்பட்டது.

அப்போது அவர் அசாம் மாநிலத்தை திலீப் பகதூர் என்பதும், கடந்த சில வருடங்களாக பெங்களுருவில் தான் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் இங்கு பல கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. திருட வந்த இடத்தில் தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க..ஹரிஜன்.! ஆளுநர் ஆர்.என் ரவிக்கு இது தெரியுமா? தெரியாதா? விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம் !

click me!