தாய்லாந்திலிருந்து 5 அரிய வகை விலங்குகளை விமானத்தில் கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்ததோடு அந்த விலங்குகளை அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பினர்.
தாய்லாந்திலிருந்து 5 அரிய வகை விலங்குகளை விமானத்தில் கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைது செய்ததோடு அந்த விலங்குகளை அதே நாட்டிற்கு திருப்பி அனுப்பினர். தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியிடம் சோதனை மேற்கொண்டதில் அவரது பை ஒன்றில் 5 அரிய வகை வெளிநாட்டு விலங்குகள் உயிருடன் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: உங்க நம்பருக்கு 35 லட்சம் பரிசு விழுந்துருக்கு.! பெண்ணிடம் இருந்து 9 லட்சத்தை அபேஸ் செய்த மோசடி கும்பல்
இதை அடுத்து அந்த விலங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த விலங்கு ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் அபூர்வ வகை விலங்குகள் என்றும் அதை வளர்ப்பதற்காக எடுத்து வந்திருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்தார். ஆனால் அவரிடம் அந்த விலங்குகளுக்கான, எந்த ஆவணங்களும் இல்லை என்பதால் அந்த பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்தனர். அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வனவிலங்கு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தேவாங்கு ரகத்தை சோ்ந்த அந்த அபூர்வ வகை விலங்குகளால் வெளிநாட்டு நோய்க்கிருமிகள் நம் இந்தியாவுக்குள் பரவிவிடும் என்றும் இதை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டூர் போன தம்பதிகள்..திருட வந்த இடத்தில் தூக்கில் தொங்கிய கொள்ளையன் - வெளியான அதிர்ச்சி காரணம்
undefined
இதை அடுத்து அந்த ஐந்து அபூர்வ வகை விலங்குகளும், அது கொண்டுவரப்பட்ட அதே தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் அதற்கான செலவுத்தொகை அனைத்தையும் இந்த விலங்குகளை கடத்தி வந்த அந்த சென்னை பயனிடம் இருந்து வசூல் செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதோடு இந்த அரிய வகை விலங்குகளை கடத்தி வந்த பயணியை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் கைது செய்தனர்.