2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற பெண் 1 வாரத்திற்கு பின் மீட்பு

By Velmurugan s  |  First Published Feb 22, 2023, 6:31 PM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்ணை ஒரு வாரத்திற்கு பின்னர் மீட்ட காவல் துறையினர், அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுண்டப்பன். தனது வீட்டில் பட்டு நெசவு கைதறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி  லட்சுமி. இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இதேபோன்று ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். 

இந்தநிலையில், தனபால் செம்மாண்டப்பட்டியில் சவுண்டப்பன் வீட்டருகே உள்ள பட்டு தறிக்கூடத்தில், பட்டு நெசவு செய்யும் கூலி வேலை செய்து வருகிறார். இதனிடையே தனபாலும், சவுண்டப்பன் மனைவி லட்சுமியும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

Latest Videos

ஒரு கட்டத்தில் மோகம் அதிகரித்து இருவரும் குடும்பத்தை பிரிந்து ஓட்டம் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் தவிக்கவிட்டு விட்டு லட்சுமி தனபாலுடன் ஓட்டம் பிடித்தார். லட்சுமியின் கணவர் ஓமலூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகாரளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

கந்துவட்டி கொடுமை; துணை மேலாளர் வீடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஒரு வார தேடுதலுக்கு பிறகு பாண்டிச்சேரியில் அறை எடுத்து தங்கி இருந்த ஜோடியை கண்டுபிடித்து ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது லட்சுமியை பார்த்து குழந்தைகளும், கணவரும் தங்களுடன் வருமாறு அழுதுள்ளனர். ஆனால், தனக்கு குழந்தைகளும் வேண்டாம், கணவரும் வேண்டாம் என்று கூறிய லட்சுமி, தனது காதலன் தனபாலுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார். 

கல்லூரி மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை முயற்சி; படுகாயங்களுடன் அனுமதி

அப்போது காதலனுடன் அனுப்ப மறுத்த காவல் துறையினர், லட்சுமியை தாயுடன் அனுப்பி வைத்தனர். இதனிடையே தனபாலின் மனைவி, தனது கணவனிடம் தகராறு செய்து தங்களுடன் வருமாறு கூச்சலிட்டார். இதையடுத்து காவல் துறையினர் தனபாலை மனைவி மற்றும் குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!