தன் மகனைக் கடித்த தெருநாய்க்கு உணவு அளிக்க வேண்டாம் என்று கூறிய பெண்ணை நாய் பிரியர் ஒருவர் ரத்தம் கொட்டும் அளவுக்குக் கடித்துள்ளார்.
நாய் பிரியர் ஒருவர் தெருநாய்க்கு உணவு வழங்குவதை தடுக்க முயன்ற பெண்மணிவை அவரது ரத்தம் வருமளவு கடித்து விரட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் நாடியாத் தாலுகாவில் உள்ள கம்லா என்ற கிராமத்தில் வசிக்கும் சீதா ஜலாவின் கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். மகன்கள் யக்னேஷ், (26) மற்றும் பிரகாஷ் (22) ஆகியோருடன் வசித்துவருகிறார். வீட்டுக்கு அருகில் உள்ள் ஒரு மரக்கடையில் வேலை பார்க்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, ராவல் என்ற பெண் தெரு நாய்க்கு உணவு கொடுப்பதைப் பார்த்துள்ளார். அதே நாய்தான் ஒரு வாரத்திற்கு முன்பு சீதாவின் மகன் பிரகாஷைக் கடித்தது. இதனால் சீதா ராவலிடம் சென்று அதற்கு உணவளிக்க வேண்டாம் என்று எடுத்துக்கூறியுள்ளார். அதை அவர் கேட்க மறுத்தபோதும் சீதா தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறார்.
இதனால் ஆத்தரம் அடைந்த ராவல் மற்றும் அவரது கணவர் கமலேஷ் ஆகியோர் தன்னை கட்டையால் தாக்கியதாக சீதா குற்றம் சாட்டுகிறார். அதுமட்டுமின்றி, “நான் கைகளைப் பிடித்துத் தடுக்க முயன்றபோது, ராவல் என் கட்டைவிரலை ரத்தம் வரும்படி கடித்துவிட்டார். நான் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். நான் மயக்கம் அடையும் வரை அவர்கள் என்னைத் தடியால் அடித்தனர்” எனவும் சீதா காவல்துறையிடம் கூறினார்.
இதுபற்றி தகவல் அறிந்த சீதாவின் மூத்த மகன் யக்னேஷ் தனது தாயைக் காப்பாற்ற விரைந்தார். அப்போது ராவலும் அவரது கணவரும் கொலை மிரட்டல் விடுத்தனர் என்ற யக்னேஷ் தெரிவிக்கிறார்.
ஜலா அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வசோ காவல்துறை சீதாவைத் தாக்கிய இருவரும் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர்கள் மீது தகாத வார்த்தைகளைப் பேசியது, கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.