அரியலூர் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் தனியார் நிறுவன துணைமேலாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் டெக்னிகல் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் நரசிம்மலு. இவர் அரக்கோணத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது வரை மாரிமுத்துவிடம் 45 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார்.
மேலும் இது தொடர்பாக நரசிம்மலுவை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நரசிம்மலு அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று ரயில் முன் பாய்ந்து தற்போது தற்கொலை செய்து கொண்டார்.
undefined
மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தன் இறப்பிற்கான காரணம் கந்துவட்டி மாரிமுத்து தான் என வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியுள்ளார். இதனையடுத்து உடலை கைப்பற்றிய ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கந்துவட்டி கொடுமையால் துணை மேலாளர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.