கோவையில் மருத்துவ மாணவியின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றிய உறவுக்கார பெண் கைது

By Velmurugan s  |  First Published Feb 22, 2023, 12:30 PM IST

கோவையில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலி கணக்கு தொடங்கி பதிவேற்றம் செய்த அத்தை மகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா (வயது 24). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான எம்பிபிஎஸ் மாணவி, இவரின் காதல் விவகாரம் குறித்து  கௌசல்யாவின்  பெற்றோரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கௌசல்யா எம்பிபிஎஸ் மாணவியின் காதலரிடம் போலி instagram கணக்கு தொடங்கி தான் எம்பிபிஎஸ் மாணவியின் முன்னாள் காதலன் என்று கூறி அவரிடம் பேசியிருக்கிறார்.

தொண்டாமுத்தூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் instagram மூலமாகவே பேசி இருக்கிறார். இறுதியில் பாலகிருஷ்ணனிடம் இருந்த அந்தரங்க புகைப்படங்களை கௌசல்யா பெற்றிருக்கிறார். போலி கணக்கு மூலம் அவரிடம் பேசி புகைப்படங்களை பெற்ற கௌசல்யா புதிதாக வேறொரு கணக்கை தொடங்கி அதில் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்.

Tap to resize

Latest Videos

கௌசல்யா தன்னிடமும் பல வீடியோக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோக்களை அனுப்புவதாகவும் கூறி காதலனிடம் இருந்து வீடியோக்களை பெற்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

கல்லூரி மாடியில் இருந்து கீழே குதித்து மாணவி தற்கொலை முயற்சி; படுகாயங்களுடன் அனுமதி

மருத்துவ மாணவியின் நண்பர்கள் மூலம் இதனை அறிந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதனை அடுத்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் படங்களை பதிவேற்றம் செய்த கௌசல்யாவையும், மருத்துவ மாணவியின் காதலன் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரையும் விசாரிக்கையில் கௌசல்யா விரோதம் காரணமாகவே இதனை செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

click me!