திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். தி.மலையில் கடந்த 12 ஆம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி அதிலிருந்து 72 லட்சத்து 78 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதை அடுத்து ஏடிஎம் கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் பாதி எரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் உடலால் பரபரப்பு
கைது செய்யப்பட்ட கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப் உள்பட 2 பேரையும் தனிப்படை போலீசார் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். கொள்ளையர்கள் 2 பேரையும் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட எஞ்சிய கொள்ளையர்கள் எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 வடமாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ச்சீ.. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை.. உடந்தையாக இருந்த அண்ணன் - கண்ணீருடன் புகார் கொடுத்த மகள்
கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். இதை அடுத்து தமிழகம் அழைத்து வரப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மார்ச் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் 2 கொள்ளையர்கள் தலைமறைவாக உள்ளதால் அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.