அவினாஷ் காலையில் எழுந்ததும் பல் துலக்காமலேயே தன் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால், குழந்தைக்கு நோய் தொற்று பரவக்கூடும் என எண்ணிய தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என அவினாஷை கண்டித்துள்ளார்.
பல் தேய்க்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்த கணவனுடன் சண்டையிட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த தீபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவருக்கும் ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. பெங்களூருவில் வேலை பார்த்து வந்த அவினாஷ் இரண்டு மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். தற்போது வொர்க் ஃபிரம் ஹோம் முறையில் வீட்டில் இருந்து பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க;- அடச்சி.. ஸ்கூல்ல ஒரு வாத்தியார் செய்ற வேலையா இது.. கதறிய பள்ளி மாணவி..!
இதையும் படிங்க;- நண்பன்தானே என நம்பிச் சென்ற இளம்பெண்.. வாயில் துணியை வைத்து பொத்தி தோப்புக்குள் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.!
இந்நிலையில், அவினாஷ் காலையில் எழுந்ததும் பல் துலக்காமலேயே தன் குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால், குழந்தைக்கு நோய் தொற்று பரவக்கூடும் என எண்ணிய தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது என அவினாஷை கண்டித்துள்ளார். நேற்று வழக்கம் போல அவினாஷ் குழந்தைக்கு முத்தம் கொடுத்தபோது தீபிகா கண்டித்துள்ளார். இதனால் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க;- வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி திடீர் தற்கொலை... இதுதான் காரணமா?
இதனால், ஆத்திரமடைந்த அவினாஷ் கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்னர். பின்னர், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவினாஷை போலீசார் கைது செய்தனர்.