அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கூலி வேலை செய்து வந்தவர் சுப்ரமணியன். இவர் தான் பெற்ற மகள்களுக்கு தொடர்ந்து பல முறை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் சுப்ரமணி தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதாக இல்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு மனைவி கொடுத்த புகாரின் பெயரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செய்முறை தேர்வுகள் நிறைவு; மேசை, நாற்காலிகளை உடைத்து வீடியோ வெளியிட்ட மாணவிகள்
undefined
வழக்கு தொடர்பான விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கின் விசாரணையில் குற்றவாளி சுப்ரமணியனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாலியல் தொல்லைக்கு ஆளான இரண்டு சிறுமிகளுக்கும் அரசு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளார்.
மகளிரணி நிர்வாகிகளுடன் பிரமாண்ட கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடிய எடப்பாடி பழனிசாமி