ஆறிபோன டீயை கொடுக்கிறாயா? திட்டிய மாமியாரை கதறவிட்டு தீர்த்து கட்டிய மருமகள்.. எப்படி தெரியுமா?

By vinoth kumar  |  First Published Mar 9, 2023, 8:25 AM IST

தலைவலியால் அவதிப்பட்ட பழனியம்மாள் தனது மருமகளிடம்  சூடாக ஒரு டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். அவரும் டீ போட்டு கொடுத்தார். அதை வாங்கிய மாமியார் டீ ஏன் ஆறி போய் உள்ளது என்று கேட்டு மருமகளை திட்டியதாக கூறப்படுகிறது. 


டீ ஏன் ஆறி போய் இருக்கிறது என்ற கேட்ட மாமியாரை மருமகள் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியை சேர்ந்த வேலு என்பவரது மனைவி பழனியம்மாள் (75). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சுப்பிரமணியனின் மனைவி கனகு (42). கணவர் வேலு இறந்து விட்டதால், பழனியம்மாள் தனது மகனுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தலைவலியால் அவதிப்பட்ட பழனியம்மாள் தனது மருமகளிடம்  சூடாக ஒரு டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். அவரும் டீ போட்டு கொடுத்தார். அதை வாங்கிய மாமியார் டீ ஏன் ஆறி போய் உள்ளது என்று கேட்டு மருமகளை திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பெண் தோழியுடன் உல்லாசமாக இருக்க ஒரே நேரத்தில் 2 வயாகரா போட்டு ரெடியாக இருந்த 41 வயது நபருக்கு நேர்ந்த சோகம்

 

இதனால், ஆத்திரம் அடைந்த மருமகள் கனகு அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியார் என்று கூட பாராமல் தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த பழனியம்மாள் வலி தாங்க முடியாமல் அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். உடனே காயமடைந்த பழனியம்மாளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க;-  ஓயாமல் டார்ச்சர்! உல்லாசத்தின் போது ஆண் உறுப்பில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கள்ளக்காதலி? இறுதியில் நடந்த சோகம்

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கனகுவை கைது செய்தனர். 

click me!