ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த பயங்கரம்! வண்ணம் பூசிய இளைஞரை தீ வைத்துக் கொல்ல முயற்சி!

By SG Balan  |  First Published Mar 8, 2023, 7:13 PM IST

ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு தன் மீது வண்ணம் பூசிய இளைஞரை தீ வைத்துக் கொல்ல முயற்சி செய்த சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.


தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில், செவ்வாய்கிழமை ஹோலி கொண்டாட்டத்தின்போது பைக்கில் சென்றுகொண்டிருந்த நபர் தன் மீது வண்ணங்களை வீசியவர் மீது தீ வைத்துள்ளார்.

மேடக் மாவட்டத்தில் உள்ள மார்பல்லி கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட 35 வயது இளைஞர் பர்ரி அம்பாதாஸ் என்ற அம்பாதாஸுக்கு தலை, தோள்கள், கைகள் எனப் உடலில் பல தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. 34 சதவீத தீக்காயங்களுடன் அவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

Heart Attack Deaths: தெலுங்கானாவில் போன் பேசிக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் மரணம்!

ரெகோடு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பாதாஸ் மீது தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்படும் எம். டி. ஷபீர் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சி மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஷபீரும் அம்பாதாஸும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். மார்பள்ளியில் வசிக்கும் அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே பழக்கம் இருந்ததுள்ளது. இந்நிலையில் அம்பாதாஸ் தன் நண்பர்களுடன் செவ்வாய் காலை 11 மணியளவில் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது ஷபீர் தனது பைக்கில் எதிரே வந்தார்.

Varkala Paragliding: அந்தரத்தில் மாட்டிக்கொண்ட இளம்பெண்! பாராகிளைடிங் செய்தபோது நேர்ந்த விபரீதம்!

ஷபீரைப் பார்த்த அம்பாதாஸ் அவர் மீது வண்ணம் பூச முயன்றிருக்கிறார். அதனை விரும்பாத ஷபீர் அம்பாதாஸ் மீது பெட்ரோல் பாட்டிலை ஊற்றி தீ வைத்துவிட்டார். அம்பாதாஸ் பெட்ரோலை எடுத்துச் சென்றதாகவும், வயலுக்குச் சென்றுகொண்டிருந்த ஷபீர் தீப்பெட்டியை வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

அப்போது அப்பகுதியில் இருந்த கிராம மக்கள் அம்பாதாசை உடனடியாக மீட்டு நாராயண்கேட் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் சங்கரெட்டி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். தற்போது ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

click me!