கோவையில் தொடரும் கொலை..! ரவுடிகளை சுட்டுப்பிடித்த போலீஸ்- பயத்தில் சரண் அடைந்த முக்கிய குற்றவாளி

By Ajmal Khan  |  First Published Mar 8, 2023, 3:06 PM IST

கோவை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை 50 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கவுதம் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.


கோவையில் கொலை

கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்  இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் இரண்டு பேர் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கி தப்பிக்க முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர். இதனையடுத்து கோவை நகரில் உள்ள ரவுடிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இது வரை 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பித்து ஓடியவர்களை துப்பாக்கியால்சுட்டும் போலீசார் பிடித்துள்ளனர். இந்தநிலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கவுதம் என்பவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்து வந்தார். 

Tap to resize

Latest Videos

தமிழகத்திலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய 27,000 வட மாநிலத் தொழிலாளர்..! விக்கிரமராஜா பரபரப்பு தகவல்

சரண் அடைந்த முக்கிய குற்றவாளி

இந்த நிலையில் கவுதமின் கூட்டாளியை போலீசார் காலில் சுட்டுப்பிடித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம் தன்னை போலீசார் என்கவுன்டர் மூலம் சுட இருப்பாதகவு, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து கவுதமின் மனைவி, மாமியார் மற்றும் அக்காவை போலீசார் கஞ்சா வழக்கில் கைது செய்தனர். இந்தநிலையில் கோவையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி "காமராஜபுரம் கவுதம் " சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். இந்தநிலையில்  பட்டாகத்தியுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ வெளியிட்டிருந்த பெண் வினோதினி தலைமறைவாகியுள்ள நிலையில் விரைவில் சரண் அடைவார் என தகவல் வெளியாகியுள்ளது.  

சேலத்தில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய காதல் கணவர்; மருத்துவர்கள் பரபரப்பு புகார்

click me!