மும்பையில் ஸ்டேட் வங்கியில் பணிபுரியும் தினேஷ் வாடிக்கையாளருக்கு உதவுவது போல் நாடகமாடி ரூ.7.5 லட்சத்தை திருடியுள்ளார்.
மும்பையில் இளம்பெண் ஒருவர், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஊழியரால் ஏமாற்றப்பட்டு ரூ.7.5 லட்சம் பணத்தை பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மலாட் (கிழக்கு) பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிளை ஒன்று உள்ளது. மும்பையின் கண்டிவலியில் (கிழக்கு) பகுதியில் வசிக்கும் 26 வயதான ஜானகி சௌபே அந்தக் கிளையில் கணக்கு வைத்திருக்கிறார். அவர் வங்கிக்கு வரும்போதெல்லாம் வங்கியில் பணிபுரியும் தினேஷ் பைசானே என்ற ஊழியர் அவருக்கு உதவிகள் செய்துவந்துள்ளார்.
ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த பயங்கரம்! வண்ணம் பூசிய இளைஞரை தீ வைத்துக் கொல்ல முயற்சி!
பணம் செலுத்தும் படிவத்தை நிரப்புவது போன்ற சிறுசிறு உதவிகள் செய்துவந்திருக்கிறார். இவரே ஒருநாள் ஆன்லைன் பேங்கிங் வசதியையும் ஜானகிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது அதற்கான பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு இரண்டையும் அவர் குறித்து வைத்து கள்ளத்தனமான பணபரிவர்த்தனைகள் செய்திருக்கிறார். ஜானகி வங்கிக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் இதுபோன்ற திருட்டு பண பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார். OTP எண்ணைத் தெரிந்துகொள்ள ஜானிகியிடம் சாதுர்யமாகப் பேசி, அவரது மொபைல் போனை வாங்கி வைத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஒருமுறை வங்கிக்குச் சென்றபோது ஏதோ சரியாகவில்லை ஜானகிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதுபற்றி தினேஷிடம் கேட்டதற்கு, பாஸ்புக் அச்சிடும் இயந்திரத்தில் கோளாறு இருக்கலாம் என்று கூறியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, கணக்கில் 12 லட்சம் ரூபாய் இருப்பதாக ஜானகியிடம் காட்டியுள்ளார். ஆனால் ஜானகி வீட்டுக்குச் சென்று சரிபார்த்தபோது, பல முரண்பாடுகளைக் கண்டறிந்தார்.
Women's Day Chefs: உணவில் உச்சம் தொட்ட பெண் சமையல் கலைஞர்கள்!
இறுதியில் வங்கி மேலாளரை சந்தித்து இதுபற்றி விசாரித்தபோது உண்மையான இருப்புத் தொகையைக் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். ரூ. 12,26,259 இருக்கவேண்டிய நிலையில் வெறும் ரூ.5,29,046 மட்டுமே இருப்பது தெரியவந்தது. அத்துடன் ஜானகிக்குத் தெரியாமல் 12 முறை கிரெடிட் கார்டு பணபரிவர்த்தனை மூலம் ரூ.7,63,196 தொகை கணக்கிலிருந்து கழிக்கப்பட்டதும் தெரிந்தது.
பாதிக்கப்பட்ட ஜானகி மார் 6ஆம் தேதி மும்பை காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 டி இன் கீழ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றிய குற்றத்துக்காகவும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணமோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் ஆகிய குற்றங்களுக்காகவும் தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.