கள்ளக்காதல் உறவால் பிறந்த குழந்தை.. சுவற்றில் மோதி.. கழுத்தை இறுக்கி கொன்று புதைப்பு.. தாய், பாட்டி கைது.!

Published : Jul 29, 2022, 01:15 PM ISTUpdated : Jul 29, 2022, 01:21 PM IST
  கள்ளக்காதல் உறவால் பிறந்த குழந்தை.. சுவற்றில் மோதி.. கழுத்தை இறுக்கி கொன்று புதைப்பு.. தாய், பாட்டி கைது.!

சுருக்கம்

கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் கட்டைப்பையில் வைத்து பாலத்தின் பக்கவாட்டு சுவரில் தாயும் மகளும் சேர்ந்து கொடூரமாக அடித்துள்ளனர். அப்போதும் சாகாமல் அழுததால் கழுத்தை நெரித்து கொன்று, வீட்டுக்கு கொண்டுபோய் பாத்திரத்தில் மூடி வைத்துள்ளனர். 

கள்ளக்காதல் உறவால் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த வேடம்பூரை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ரேணுகா (33). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், குடவாசல் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்தபோது அங்கு வேலை பார்க்கும் கமலேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் ரேணுகா கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேணுகாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இதையும் படிங்க;- செஃபி எடுத்து திருமண நாளை கொண்டாடிய மனைவி திடீர் மாயம்.. காதலனுடன் சென்றது அம்பலம்.. கணவர் அதிர்ச்சி.!

ஆனால், 24ம்  தேதி குழந்தையை கொன்று புதைத்துவிட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் தாசில்தார் சந்தான கோபால கிருஷ்ணன் மற்றும் போலீசார் சென்று விசாரித்தனர். பின்னர், குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி குழந்தையை வெளியில் எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தாய் ரேணுகா மற்றும் பட்டி ரேவதி ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் கூறுகையில்;- கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் கட்டைப்பையில் வைத்து பாலத்தின் பக்கவாட்டு சுவரில் தாயும் மகளும் சேர்ந்து கொடூரமாக அடித்துள்ளனர். அப்போதும் சாகாமல் அழுததால் கழுத்தை நெரித்து கொன்று, வீட்டுக்கு கொண்டுபோய் பாத்திரத்தில் மூடி வைத்துள்ளனர். மறுநாள் அதிகாலை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர் என்றனர்.

இதையும் படிங்க;-  அவன் படிப்புதான் 8ம் வகுப்பு! பண்ற வேலையெல்லாம் வேற லெவல்! பள்ளி மாணவனுடன் எஸ்கேப்பான ஆன்ட்டி பகீர்.!

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி