செஃபி எடுத்து திருமண நாளை கொண்டாடிய மனைவி திடீர் மாயம்.. காதலனுடன் சென்றது அம்பலம்.. கணவர் அதிர்ச்சி.!

By vinoth kumar  |  First Published Jul 29, 2022, 12:32 PM IST

திருமண நாளை முன்னிட்டு விசாகப்பட்டினம் கடற்கரையில் செல்ஃபி எடுக்கும்போது மனைவி திடீரென மாயமானார். செல்ஃபி எடுக்கும் போது கடலில் விழுந்துவிட்டாரோ என்று எண்ணிய கணவர் ஒரு கோடி ரூபாய் செலவிட்டு ஹெலிகாப்டர் உதவியுடன் தேடிய நிலையில் காதலனுடன் சென்றது அமல்பலமாகியுள்ளது. 


திருமண நாளை முன்னிட்டு விசாகப்பட்டினம் கடற்கரையில் செல்ஃபி எடுக்கும்போது மனைவி திடீரென மாயமானார். செல்ஃபி எடுக்கும் போது கடலில் விழுந்துவிட்டாரோ என்று எண்ணிய கணவர் ஒரு கோடி ரூபாய் செலவிட்டு ஹெலிகாப்டர் உதவியுடன் தேடிய நிலையில் காதலனுடன் சென்றது அமல்பலமாகியுள்ளது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் என்ஏடி கோத்தா சாலையில் வசிப்பவர் பிரியா (21). இவர் தனது 2ம் ஆண்டு திருமண நாளை கொண்டாட கணவர் ஸ்ரீனிவாஸ் என்பவருடன் கடந்த 25ம் தேதி அதே பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா கடற்கரைக்கு சென்றார். கடற்கரையில்  இருவரும் செல்ஃபி எடுத்து கொண்டனர். சிறிது நேரத்தில் கடற்கரை பகுதிக்கு பிரியா தனியாக சென்றார். அந்த நேரத்தில் ஸ்ரீனிவாசன் செல்போனுக்கு அழைப்பு வந்தது. சிறிது தூரம் தள்ளி வந்து பேசியுள்ளார். அதற்கு பிறகு மனைவியை திடீரென காணவில்லை. இதனால், கணவர் பதறிப்போனார். 

Tap to resize

Latest Videos

ஒருவேளை கடலில் அலை இழுத்து சென்றிருக்கோ என்ற பயத்தில் கடற்கரை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மறுநாள் காலையில் படகுகள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்  மூலம் அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், காணாமல் போனதாக சொல்லப்பட்ட பிரியா பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதற்கிடையில் 2 தினங்கள் கழித்து பிரியா தன்னை யாரும் தேட வேண்டாம் என தந்தைக்கு ஆடியோ அனுப்பி இருந்தார். மேலும், நெல்லூரில் தனது காதலனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருமணத்திற்கு முன் ரவி என்பவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் காதலை தொடர்ந்துள்ளார். இதனிடையே ஸ்ரீனிவாஸ் பணி காரணமாக ஐதரபாத்தில் பிரியாவுடன் குடியேறியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் தான் விசாகப்பட்டினத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்தே தனது காதலுடன் சென்றுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில் பிரியாவை தேட கடற்படை நிர்வாகம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், பல அரசு துறைகள் தேடுதல் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பிரியாவை நெல்லூரில் இருந்து விசாகப்பட்டினம் அழைத்து வந்து விசாரணை நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

click me!