ஸ்கூல் ஓனர் பசங்க மேல தான் சார் சந்தேகமா இருக்கு... ஸ்ரீமதியின் தந்தை குமுறல்.

Published : Jul 28, 2022, 06:36 PM IST
ஸ்கூல் ஓனர் பசங்க மேல தான் சார் சந்தேகமா இருக்கு... ஸ்ரீமதியின் தந்தை குமுறல்.

சுருக்கம்

தங்கள் மகளின் மரணத்தில் பள்ளி தாளாளர் மகன்கள் மீதுதான் சந்தேகம் இருக்கிறது என கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை பகீர் தெரிவித்துள்ளார். இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனால் தாளாளரின் மகன்கள் எங்கே என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

தங்கள் மகளின் மரணத்தில் பள்ளி தாளாளர் மகன்கள் மீதுதான் சந்தேகம் இருக்கிறது என கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை பகீர் தெரிவித்துள்ளார். இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஆனால் தாளாளரின் மகன்கள் எங்கே என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியமூர் தனியார் பள்ளியில்  12ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார் மாணவி 13 ம்தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி விழுந்ததாக  கூறப்படும் இடத்தில் எந்த விதமான ரத்தக் கரையும் இல்லை, மாணவி விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் மருத்துவ மனையில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வருவதால், மாணவியின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என பெற்றோர்கள் உறவினர்கள் கூறிவருகின்றனர்.

மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு அவரது உறவினர்கள் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்,  அதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கானோர் பள்ளியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர், பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டது, இது பெரும் கலவரமாக வெடித்தது, அதில் 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பள்ளிக்கூடத்தில் இருந்த மேசை நாற்காலிகள் குளிர்சாதன பெட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் தூக்கிச் செல்லப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த கலவரத்திற்குப் பின்னர் 300க்கும் அதிகமானோர் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது, இதைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2 முறை மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கைக்காக பெற்றோர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாணவியின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது, இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மாணவியின் பெற்றோர் பேட்டி கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் அதிர்சிகர தகவல்களை கூறியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் தந்தை அந்த யூடியூப் சேனலுக்கு கூறியிருப்பதாவது :- 

எனது மகள் நன்கு படிக்கக்கூடிய மாணவி, அடுத்த மாதம்  (ஆகஸ்டு 12ஆம் தேதி) என் மகளுக்கு பிறந்தநாள், அந்த பிறந்தநாளை முன்னிட்டு நான் ஊருக்கு வரலாம் என்று இருந்தேன், ஆனால் அதற்குள் இப்படி நடந்து விட்டது, என் மகளை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன், பணம் போனால் பரவாயில்லை குழந்தை நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்  விடுதியில் சேர்த்தேன், என் மகள் காதல் செய்ததாக கூறுகிறார்கள், அப்படி ஒரு விஷயம் தெரிந்திருந்தால் பள்ளி நிர்வாகம் அப்போதே ஏன் மகளை கண்டித்து இருக்கலாமே, 

ஏன் அவர்கள் பள்ளியை விட்டு வெளியேற்ற வில்லை, என்னைப் பொறுத்தவரையில் என் மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார், சம்பவம் நடந்த அன்று இரவு பள்ளிக்கூடத்தில் பார்ட்டி நடந்திருக்கிறது, அப்போது ஏதோ போதைப்பொருள் கொடுத்ததாக சொல்கிறார்கள், அந்த பள்ளி தாளாளர் மகன்கள் சரியில்லாதவர்கள் என தகவல் கிடைக்கிறத,  அவர்கள்  இரண்டு பேர் எங்கே போனார்கள், ஏன் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை, அவர்களிடம் விசாரணை நடத்தினால்தான் என் மகளின் மரணத்திற்கு காரணம் தெரியும், அவர்களை கைது செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி