கடன் வாங்கியவர் உயிரிழப்பு… குடும்பத்திற்கு மன உளைச்சல்… வங்கிக்கு அபராதம்!!

Published : Jul 28, 2022, 09:10 PM ISTUpdated : Jul 28, 2022, 09:11 PM IST
கடன் வாங்கியவர் உயிரிழப்பு… குடும்பத்திற்கு மன உளைச்சல்… வங்கிக்கு அபராதம்!!

சுருக்கம்

கடன் வாங்கிய தந்தை உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் கடன் பட்டியலில் மனைவி, மகன் பெயரை சேர்த்த வங்கிக்கு கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடன் வாங்கிய தந்தை உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் கடன் பட்டியலில் மனைவி, மகன் பெயரை சேர்த்த வங்கிக்கு கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் கரூர் ரெப்கோ வங்கியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரூ.20 லட்சம் வீட்டு கடன் பெற்றிருந்தார். அந்த கடனுக்கு மாதந்தோறும் தவணை தொகை செலுத்தி வந்த நிலையில் கடந்த 2011 மே 8 ஆம் தேதி பழனிச்சாமி உயிரிழந்தார். பழனிசாமி கடன் பெற்றப்போது, கடன் தொகை செலுத்தி வரும்போது ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் அந்த தொகையை காப்பீடு நிறுவனம் மூலம் ஈடு செய்யும் வகையில் கடன் தொகைக்கு காப்பீடும் எடுத்து ப்ரீமியம் செலுத்தி வந்துள்ளார். 

இதையும் படிங்க: ஸ்கூல் ஓனர் பசங்க மேல தான் சார் சந்தேகமா இருக்கு... ஸ்ரீமதியின் தந்தை குமுறல்.

பழனிசாமியின் மனைவி லட்சுமி, மகன் சதீஷ்குமார் ஆகியோருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல், வங்கி தரப்பு இருவரையும் தங்கள் கடன்தாரர்களாக அறிவிப்பு செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சதீஷ்குமார் வங்கியை தொடர்புக் கொண்டுள்ளார். கடன் தொகை பற்றி தெரிவிக்காமல், கடனை திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலான சிபிலில் அவர்களை சேர்த்துவிட்டது. வங்கி நடவடிக்கையால் சதீஷ்குமாருக்கு மன உளைச்சல், அவமானம் ஏற்பட்டதால், கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி ரூ.9.10 லட்சம்  நஷ்ட ஈடு, செலவுத்தொகை ஆகியவை கோரி புகார் அளித்தார்.

இதையும் படிங்க: சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி ஆசைத்தீர பலமுறை பலாத்காரம்.. கர்ப்பமாக்கிய உறவினர் போக்சோவில் கைது.!

இதனை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் அளித்த உத்தரவில், காப்பீடு குறித்த விபரம் தெரிவிக்காத காரணத்திற்காக ரூ.1 லட்சம், சிபிலில் சதீஷ்குமார், அவரது தாய் லட்சுமி பெயரை தவறாக சேர்த்ததற்காக ரூ.3 லட்சம் என சேவை குறைப்பாட்டிற்காக மொத்தம் ரூ.4 லட்சம் வழக்கு தொடர்ந்த நாளில் இருந்து 7.5 சதவீதம் வட்டியுடன் வழங்கவேண்டும். மேலும் செலவுத் தொகையாக ரூ.7,000 வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி