மட்டன் கறி சாப்பிட்ட மாணவி.. துடிதுடித்து உயிரிழப்பு.! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

Published : May 27, 2022, 02:43 PM IST
மட்டன் கறி சாப்பிட்ட மாணவி.. துடிதுடித்து உயிரிழப்பு.! கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

சுருக்கம்

22 வயதான இவர் திருமணத்திற்கு பின்னர் மண்ணார்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை அறிவியல் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.

மட்டன் கறி

கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம் செத்தலூர் பகுதியை சேர்ந்தவர் ஆசீப். இவரது மனைவி பாத்திமா ஹனான். இவருக்கு வயது 22. இவர் திருமணத்திற்கு பின்னர், மண்ணார்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை அறிவியல் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் மட்டன் எடுத்து சமைத்த பாத்திமா ஹனான், அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த இறைச்சி சற்று பருமனான அளவாக காணப்பட்டதால் தொண்டைக்குழியில் சிக்கி கொண்டு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து மாணவி பாத்திமாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அந்த தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது தொண்டையில் சிக்கி இருந்த இறைச்சி மூச்சு குழாயை அடைத்துக் கொண்டதால் மூச்சுவிட இயலாமல் கடும் அவதிக்குள்ளான பாத்திமா பரிதாபமாக பலியானார்.

கேரளா - தொடரும் அவலம்

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையினர் பாத்திமாவின் இறப்புக்கு பருமனான இறைச்சித் துண்டு தான் காரணமா ? அல்லது இறைச்சித்துண்டு கெட்டு போயிருந்ததா ? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில் சவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இறைச்சியால் மற்றொரு மாணவி உயிரிழந்துள்ளது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி