கண்ட இடத்தில் கை வைத்து பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை? பிடிஓக்கு சரியான ஆப்பு வைத்த கலெக்டர்..!

By vinoth kumarFirst Published May 27, 2022, 1:43 PM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன். இவர். திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியனில் பணியாற்றிய போது, பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனையடுத்து, துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 

பெண் ஊழியரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பதவியிறக்கம் செய்து  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன். இவர். திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியனில் பணியாற்றிய போது, பெண் ஊழியர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனையடுத்து, துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து நாராயணன் தற்போது வகிக்கும் பதவியில் இருந்து இரு நிலை கீழ் இறக்கம் செய்யப்பட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் இருந்து, இளநிலை உதவியாளராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தனக்கு நேரிட்ட பாலியல் துன்புறுத்தலை துணிச்சலுடன் புகார் செய்ததை பாராட்டியுள்ளார். 

பிற பெண் ஊழியர்களும் தைரியமாக எதிர்த்து நிற்கும் வகையில், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 பிரிவு 13, 15(அ)ன் படி குற்றம் புரிந்த அரசு ஊழியரின் ஊதியத்தில் ரூ.10 ஆயிரத்தை பிடித்தம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

click me!