கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் வேறு சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்த மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கர்நாடகாவில் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்த பெண்ணை தந்தையே கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இதனை அறிந்து அந்தப் பெண்ணைக் காதலித்த இளைஞரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கோலார் தங்கவயல் (கேஜிஎஃப்) பகுதியில் உள்ள பங்கார்பேட்டையில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. 20 வயதாகும் இவரது மகள் கீர்த்தியும், வேறு சாதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கங்காதர் என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபின், கீர்த்தி தன் தந்தையிடம் தங்கள் காதல் பற்றிக் கூறியுள்ளார்.
தந்தை கிருஷ்ணமூர்த்தி கங்காதர் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் காரணம் காட்டி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் கீர்த்தி தொடர்ந்து தந்தையிடம் இதுபற்றி பேசி வந்திருக்கிறார். இதனால் தந்தை மகள் இருவருக்கும் இண்டையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் அரிசிக்குப் பதில் பணம்!
செவ்வாய்க்கிழமை காலை நடந்த வாக்குவாதத்தின் போது கிருஷ்ணமூர்த்தி, கங்காதருடன் உறவை முறித்துக்கொள்ளுமாறு மகள் கீர்த்தியை வற்புறுத்தியுள்ளார். கீர்த்தி அதற்கு சம்மதிக்காமல் எதிர்த்துப் பேசியதால் தந்தைக்கும் மகளுக்கும் இடையே சண்டைக்கு வந்திருக்கிறது. அப்போது ஆத்தரம் தலைக்கு ஏறிய கிருஷ்ணமூர்த்தி தனது மகள் கீர்த்தியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.
மகளைக் கொன்ற பின்னர் அதை மூடி மறைக்கும் முயற்சியாக, பெண்ணை மின்விசிறியில் தொங்கவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது போல சித்தரித்து நாடகம் ஆடியுள்ளார். கீர்த்தி இறந்த தகவல் அக்கம்பக்கத்தினர் வாயிலாக காவல்துறையை எட்டியதும், போலீசார் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
கீர்த்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது உண்மைச் சொல்லி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அரியலூர் மாளிகைமேடு அகழாய்வில் சீன பானை ஓடு கண்டெடுப்பு! மகிழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு!
கொத்தனாராக வேலை பார்க்கும் கீர்த்தியின் காதலர் கங்காதர், தன் காதலி மரணம் குறித்து அறிந்து மனமுடைந்து போய்விட்டார். துக்கத்தைத் தாங்க முடியாமல் தவித்த அவர், அருகில் இருந்த ரயில் பாதையில் வந்துகொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கேஜிஎஃப் காவல் கண்காணிப்பாளர் கே. தர்னி தேவி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் வேலை பார்த்த போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை