Crime News Today: மது போதையில் தம்பியை போட்டு தள்ளிய அண்ணன் கைது; திருவாரூரில் பரபரப்பு

Published : Jun 28, 2023, 12:30 PM ISTUpdated : Jul 20, 2024, 12:13 AM IST
Crime News Today: மது போதையில் தம்பியை போட்டு தள்ளிய அண்ணன் கைது; திருவாரூரில் பரபரப்பு

சுருக்கம்

குடும்பத் தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மது போதையில் தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு சக்திவேல், கார்த்திக் என்கிற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் சக்திவேலும் அவருடைய சகோதரர் கார்த்திக்கும் நேற்று இரவு கடுமையான மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது கார்த்திக்கின் மனைவி தனது கணவரிடம் உங்களது அம்மாவும், அண்ணன் மனைவியும் தொடர்ந்து என்னிடம் பிரச்சினை செய்து வருவதாகவும், தன்னைப் பற்றி புரளி பேசுவதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து கார்த்திக் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த அண்ணன் சக்திவேல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து உடன் பிறந்த சகோதரரான கார்த்திகின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கார்த்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் கார்த்திக்கை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீர் வசதி கூட இல்லை; எம்எல்ஏவை மண்டபத்திற்குள் வைத்து பூட்டு போட்ட கிராம மக்கள்

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே கார்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சக்திவேலை கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்து கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட கார்த்தியின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சொந்த அண்ணனே தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிக்னல் கொடுத்தும் நிற்காமல் சென்ற ரயில்; பயணிகள் ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!