நேற்று முன்தினம் இரவு அவினாஷ் தரமணி லிங்க் ரோடு அருகே கத்தியுடன் நின்று கொண்டு நான் கொலை செய்து விட்டேன் என்று அலறி கூச்சலிட்டார்.
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொந்தரவு செய்த கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி வேலைபார்த்து வந்தவர் கொளஞ்சி(45). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆத்தூராகும். அதே மேம்பாலத்தில் கீழ் அவினாஷ்(22) என்பவரும் கடந்த ஒரு வாரமாக தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவினாஷ் தரமணி லிங்க் ரோடு அருகே கத்தியுடன் நின்று கொண்டு நான் கொலை செய்து விட்டேன் என்று அலறி கூச்சலிட்டார். இதனை பார்த்தி அடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க;- ஓயாமல் மாணவனுக்கு ஓரினச்சேர்க்கை டார்ச்சர்! டிஸ்மிஸ் ஆன பள்ளி ஆசிரியர்! அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு.!
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்திய போது கொளஞ்சி என்பவரை அவினாஷ் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொளஞ்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், குற்றவாளி அவினாஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க;- இதற்காக தான் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை நடுரோட்டில் வைத்து போட்டு தள்ளினோம்! கைது செய்யப்பட்ட 11 பேர் பகீர்.!
விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில், இருவரும் சேர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது கொளஞ்சி தொடர்ந்து அவினாசை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதற்கு அவினாஷ் மறுப்பு தெரிவித்ததால் ஆபாசமாக பேசி கிண்டல் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவினாஷ் காய்கறி வெட்டும் கத்தியால் கொளஞ்சியை குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவினாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.