மத்திய பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், தனது காதல் விவகாரத்தால் மனமுடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. பின்னர் அந்த நபர் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையில் டிரைவராகப் பணிபுரிந்த சுபாஷ் காரடி என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டுத் துப்பாக்கியுடன் ஜாகிர் கான் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து, அந்தப் பெண், அவரது தந்தை மற்றும் அவரது சகோதரரைச் சுட்டுக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : 18 வயசு முடிஞ்ச ஒருவாரத்திலேயே 32 வயது ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண், உயிரிழந்த கான்ஸ்டபிளின் காதலி என்று கூறப்படுகிறது. அந்த பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25 வயதுடைய பெண் மற்றும் அவரது சகோதரரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அந்தப் பெண் முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் சிறந்த சிகிச்சைக்காக இந்தூருக்கு மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
கொடூரமான கொலையை செய்த பிறகு, சுபாஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார் அவரின் பதிவில், "அவள் எனக்கு துரோகம் செய்ததால் நான் அவளைக் கொன்றேன். அவளால் மறக்க முடியாத வலியைக் கொடுத்தேன்." என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் சில மணி நேரம் கழித்து, சுபாஷின் உடல் சிதைந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும் 25 வயது பெண்ணுக்கும் இடையிலான காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட காவல்துறை தலைவர் யஷ்பால் சிங் ராஜ்புத் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து போலீசார் விரைந்து விசாரணை நடத்தி குடும்பத்திற்கு நீதி பெற்று தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தாய் பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு.. ஆத்திரத்தில் மகள் செய்த காரியம்..!