44 வயதில் கல்லூரி மாணவியா.. இந்து கடவுள்களை அவமானப்படுத்த கனடா பயணம்.. லீனா மணிமேகலை மீது புகார்.

By Ezhilarasan BabuFirst Published Jul 12, 2022, 1:05 PM IST
Highlights

இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் உள்நோக்கத்தோடு சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இயக்குனர் லீனா மணிமேகலைக்கு எதிராக பத்திரிக்கையாளர் வாராகி , உள்துறை செயாளார், தாம்பரம் காவல் ஆணையாளர், சேலையூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்து கடவுள்களை அவமானப்படுத்தும் வகையில் உள்நோக்கத்தோடு சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இயக்குனர் லீனா மணிமேகலைக்கு எதிராக பத்திரிக்கையாளர் வாராகி , உள்துறை செயாளார், தாம்பரம் காவல் ஆணையாளர், சேலையூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தான் பிரபலமாக வேண்டும் என்ற தீய எண்ணத்துடனும் 44 வயதாகும் லீலா மணிமேகலை படிக்கிற போர்வையில் மாணவ விசா மூலம்  கனடா நாட்டுக்குச் சென்று அங்கிருந்து கொண்டு தமது சமூக  வலைதளத்தில் தொடர்ந்து  இந்து கடவுள்களை சிவன் பார்வதி போன்ற கடவுள்களின் புகைப்படத்தை அவமானப்படுத்தும் வகையில் தனது  டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். 
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ள லீனா மணிமேகலை, தனது பதிவுகள் அவருடைய கருத்து சுதந்திரம் என்றும் தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: இயக்குனர் அமீரை சோகத்தில் ஆழ்த்திய இழப்பு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

இதையும் படியுங்கள்: அதிமுக அலுவலகம் சீல்.. களத்தில் இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி.. உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!

இது பெரும்பான்மையாக இந்து மக்களின் மத உணர்வையும் நம்பிக்கையும் அவமதிக்கும் வகையில், அவர்களை அவமானப்படுத்தும் வகையில் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு இரு பிரிவினர் கிடையே வன்முறையை தூண்டும் வகையில் பிரிவினையை உண்டாக்கும் வகையில் தேசத்திற்கு எதிரான தீய செயலில் ஈடுபட்டு வருவதால் ஏற்கனவே இவர் மீது தில்லி, மேற்க்கு வங்கம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் எஃப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இவர் கனடா நாட்டு பிரஜை போல பாவனை செய்கிறார். ஆனால் , இவர் தமிழகத்தை சேர்ந்தவர் . தமிழகத்திலும் இது போன்ற பல சர்ச்சை கருத்துக்களை முன்பும் வெளியிட்டு தமிழக மக்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியவர்.

தற்போது மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிவிட்டு வருகிறார் ஆதலால் பத்திரிக்கையாளர் வாராகி ,உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி எஸ் மணி அவர்கள் மூலமாக உள்த்துறை செயாளார்,  தாம்பரம் காவல் ஆணையர் சேலையூர் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பி இவர் மீது எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அந்த போலீஸ் புகாரில் தெரிவித்திருக்கிறார். விரைவில் இவர் மீது வழக்கு செய்ய பதிவு செய்யப்பட்டு இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: 75-வது படத்திற்காக இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனுடன் கூட்டணி அமைத்த நயன்தாரா - அனல்பறக்க வந்த அப்டேட்

 

click me!